உள்ளாட்சி தேர்தல்- ஆரவாரத்துடன் வேட்புமனு தாக்கல் செய்த விஜய் ரசிகர் மன்றத்தினர்!!

 

உள்ளாட்சி தேர்தல்- ஆரவாரத்துடன் வேட்புமனு தாக்கல் செய்த விஜய் ரசிகர் மன்றத்தினர்!!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 ஆம் தேதியில் தேர்தலும் , தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு வரும் ஒன்பதாம் தேதியும் தேர்தல் நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சுயேட்சையாக களமிறங்குகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல்- ஆரவாரத்துடன் வேட்புமனு தாக்கல் செய்த விஜய் ரசிகர் மன்றத்தினர்!!

அதன்படி உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் போட்டியிடவுள்ளனர். இதனையடுத்து அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி N.ஆனந்து ex.mla ஆலோசனையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மேற்கு ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் விஜய் ரசிகர் மன்றம் வேட்பாளர் M.தமிழ்ச்செல்வன், காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மற்றும் காஞ்சி மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தார், வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளரை ஆதரித்து 200க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் படப்பை பேருந்து நிலையத்திலிருந்து விஜய் ரசிகர் மன்ற கொடியை பிடித்தவாறு அடுத்த முதல்வர் விஜய் என கோஷங்கள் எழுப்பி ஆரவாரத்துடன் பேரணியாக நடந்து சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.