darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



உள்ளாட்சி தேர்தல்... அலறும் மு.க.ஸ்டாலின்... எடப்பாடி போட்ட பக்கா ஸ்கெட்ச்..!

ஸ்டாலின்
ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும்கட்சி என்ற அதிகாரத்தில் பெரும்பாலான இடங்களை அதிமுகவே கைப்பற்றும். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றினால்கூட உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் அதிமுகவினர் தனக்கு இடைஞ்சலாக இருப்பார்கள் என்று கருதுகிறார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் பத்து வருடங்களாக எந்த பதவியிலும் இல்லாத பல திமுகவினருக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் ஸ்டாலின் கணக்குப் போடுகிறார்.

stalin

இதையெல்லாம் தாண்டி எடப்பாடி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்று உடும்புப்பிடியாக இருப்பதற்கு இன்னொரு மிகப்பெரிய காரணம் இருக்கிறது என்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பலமுறை டெல்லி சென்றுள்ளார். அவர் ஒவ்வொரு முறை செல்லும்போதும் மத்திய அரசிடமும் மத்திய அமைச்சர்களிடம் வைக்கும் ஒரே கோரிக்கை தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்பதுதான். 

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி டெல்லி சென்ற வேலுமணி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தபோதுகூட 2017 - 18ஆம் ஆண்டுக்கான உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய நிதி கமிஷனின் தொகையான 2,029 கோடி ரூபாயும் 2019 - 20ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு தொகை 4,345 கோடி ரூபாயும் தமிழகத்துக்கு வர வேண்டி உள்ளது. இந்த நிதியை ஒதுக்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.eps

இதுவரை மத்திய அரசிடமிருந்து தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய நிதி சுமார் 6,000 கோடிக்கு மேல் இருக்கும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத பட்சத்தில் இந்த நிதியை ஒதுக்க மத்திய அரசு தயாராக இல்லை. கடந்த ஜூலை மாதமே நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் ராசா கேள்வி எழுப்பியபோது மத்திய அரசு இதைத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதால் மத்திய அரசு தமிழக உள்ளாட்சிக்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துக்கொண்டே வருகிறது.

தேர்தல் நடத்தினால்தான் இந்த 6,000 கோடி ரூபாய் தமிழகத்துக்குக் கிடைக்கும். கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை எப்பாடுபட்டாவது நடத்தி முடித்துவிட்டால் அந்தத் தேர்தலை அடிப்படையாக வைத்தே மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரவேண்டிய முழு தொகையையும் பெற்றுவிடலாம். அந்தத் தொகையிலிருந்து ஆளுங்கட்சி என்ற வகையில் வரும் ‘பர்சன்ட்டேஜ் தொகையே’ மிகப்பல கோடிகளாக இருக்கும்.eps

எனவே தேர்தலை நடத்தி முடித்துவிட்டால் மத்திய அரசிடம் முழு தொகையையும் பெற்று, சட்டமன்றத் தேர்தலுக்குள் மக்கள்நலப் பணிகளையும் முடித்துவிடலாம், அந்தக் கட்சி ஃபண்டு மூலம் சட்டமன்றத் தேர்தல் செலவையும் ஈடுகட்டலாம் என்பதே எடப்பாடியின் கணக்கு.

2018 TopTamilNews. All rights reserved.