ஊரக உள்ளாட்சி தேர்தல் : ஓபிஎஸ் – ஈபிஎஸின் முக்கிய அறிவிப்பு!

 

ஊரக உள்ளாட்சி  தேர்தல் : ஓபிஎஸ் – ஈபிஎஸின் முக்கிய அறிவிப்பு!

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊரக உள்ளாட்சி  தேர்தல் : ஓபிஎஸ் – ஈபிஎஸின் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை அந்தந்த கட்சியினர் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அதிமுக தலைமை நியமித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் முன்னாள் எம்எல்ஏவும், அமைப்பு செயலாளருமான மைதிலி திருநாவுக்கரசு மற்றும் முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் இன்று முதல் கூடுதலாக நியமிக்கப் படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இணைந்து தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ,மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஊரக உள்ளாட்சி  தேர்தல் : ஓபிஎஸ் – ஈபிஎஸின் முக்கிய அறிவிப்பு!

இதனிடையே நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் உள்ளாட்சி தேர்தல் விரைவாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கூடுதல் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், ஏற்கனவே மூன்று முறை அவகாசம் வழங்கப் பட்ட நிலையில் மீண்டும் அவகாசம் அளிக்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா திட்டவட்டமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது