ஹிந்தி தெரியாதா? அப்ப லோன் கிடையாது போடா… மருத்துவரை விரட்டியடித்த வங்கி!

 

ஹிந்தி தெரியாதா? அப்ப லோன் கிடையாது போடா… மருத்துவரை விரட்டியடித்த வங்கி!

அரியலூர் அருகே ‘ஹிந்தி தெரியாதா? அப்ப லோன் இல்லை’ என ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரை இந்தியன் ஓவர்சிஸ் வங்கி திருப்பிய அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வங்கி மேலாளர் மீது மான நஷ்ட ஈடு கேட்டு ஓய்வுபெற்ற மருத்துவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நான் தமிழ் பேசும் இந்தியன், “இந்தி தெரியாது போடா” என்கிற வாசகங்கள்தான், தமிழக அரசியல் களத்தை தற்போது சூடாக வைத்துள்ளது.
இந்த வாசகங்கள் கொண்ட டீ-சர்ட்டை, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் அவரது நண்பர் நடிகர் ஷிரீஷ் அணிந்திருந்தது இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனதுடன், அரசியல் மட்டத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி தெரியாதா? அப்ப லோன் கிடையாது போடா… மருத்துவரை விரட்டியடித்த வங்கி!

இதனிடையே ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவர் தந்தை கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்து வரவு-செலவு பார்த்து வருகிறார்.

இந்நிலையில் பாலசுப்பிரமணியன் அவருக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு அதற்காக கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார். அந்த வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். அப்போது பேசிய வங்கி மேலாளர், “Do u know Hindi” என கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர் “I dont know Hindi, but I know Tamil and English” என பதிலளித்துள்ளார். ஆனால் வட இந்திய வங்கி மேலாளரோ, “I am from Maharashtra, I know Hindi” என தெரிவித்துள்ளார். இறுதிவரை மொழியை பற்றியே பேசிய வங்கி மேலாளர் மருத்துவர் வைத்திருந்த ஆவணங்களையும் பார்க்கவில்லை கடனை பற்றியும் எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால் கவலையடைந்த மருத்துவர் மொழி பிரச்சனை காரணமாக அடிப்படை உரிமையை மறுத்து கடன் தர மறுத்ததால் தான் மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்து வங்கி மேலாளருக்கு மான நஷ்டஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.