தமிழகத்தில் தேமுதிக மீண்டும் பெரிய கட்சியாக உருவெடுக்கும்: சுதீஷ்

தமிழகத்தில் தேமுதிக மீண்டும் பெரிய கட்சியாக உருவெடுக்கும்: சுதீஷ்

வருகிற 2021 தேர்தலில் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பரப்புரை செய்வார் என தேமுதிக மாநில கழக துணை செயலாளர் எல்கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சுதீஷ் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், “வரும் 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை டிசம்பர் மாதத்துக்குள் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை கூட்டி முடிவு செய்யப்பட்டு ஜனவரி மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் தேமுதிக மீண்டும் பெரிய கட்சியாக உருவெடுக்கும்: சுதீஷ்

மாநில கட்சி என்ற அந்தஸ்தை விட மாட்டோம். தேமுதிக தமிழகத்தில் மீண்டும் பெரிய கட்சியாக உருவெடுப்போம். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து வரும் ஜனவரி மாதத்திற்குள் அறிவிக்கப்படும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வை தேமுதிக ஆதரித்தது. ஏனென்றால் நீட் தேர்வு மூலமாக மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி கிடைக்கும். ஆனால் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை அமுல்படுத்திய பிறகு நீட் தேர்வு கொண்டு வந்தால் சரியாக இருக்கும்” எனக் கூறினார்.

தமிழகத்தில் தேமுதிக மீண்டும் பெரிய கட்சியாக உருவெடுக்கும்: சுதீஷ்

வருகிற 2021 தேர்தலில் வேட்பாளர்களை ஆதரித்து கேப்டன் விஜய்காந்த் தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பரப்புரை செய்வார் என தேமுதிக மாநில கழக துணை செயலாளர் எல்கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சுதீஷ் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், “வரும் 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை டிசம்பர் மாதத்துக்குள் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஜனவரி மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்.