கடினமான பாதையை தேர்ந்தெடுத்துள்ளோம்… பீகார் இழந்த பெருமையை மீட்பதுதான் எங்கள் இலக்கு.. சிராக் பஸ்வான்

 

கடினமான பாதையை தேர்ந்தெடுத்துள்ளோம்… பீகார் இழந்த பெருமையை மீட்பதுதான் எங்கள் இலக்கு.. சிராக் பஸ்வான்

கடினமான பாதையை (தனித்து போட்டி) தேர்ந்தெடுத்துள்ளோம். பீகார் இழந்த பெருமையை மீட்பதுதான் எங்கள் இலக்கு என்று லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்தார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி, பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடபோவதாக அதிரடி அறிவித்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துக்கும் லோக் ஜனசக்திக்கும் இடையிலான மோதலே இதற்கு காரணம். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது தொடர்பாக அந்த கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகனுமான சிராக் பஸ்வான் கூறியதாவது:

கடினமான பாதையை தேர்ந்தெடுத்துள்ளோம்… பீகார் இழந்த பெருமையை மீட்பதுதான் எங்கள் இலக்கு.. சிராக் பஸ்வான்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

நான் சுலபமான வழியை தேர்வு செய்ய நேர்ந்தால், நான் கூட்டணியில் சேர்ந்திருப்பேன். ஆனால் பீகர் மாநிலத்திற்கு உரிய உரிமையை வழங்கவும், இழந்த பெருமையை மீண்டும் கொண்டு வரவும் நான் ஒரு கடினமான பாதையை தேர்ந்தெடுத்தேன். எங்களுக்கு தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் மீது பல எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அவர் அதைப்பற்றி பேசவில்லை. இன்று வளர்ச்சி குறித்து பீகார் முதல்வரின் யோசனை என்ன என்பது எனக்கு கவலை அளிக்கிறது. திட்டங்களின் நன்மைகள் அடிமட்டத்தை எட்டவில்லை.

கடினமான பாதையை தேர்ந்தெடுத்துள்ளோம்… பீகார் இழந்த பெருமையை மீட்பதுதான் எங்கள் இலக்கு.. சிராக் பஸ்வான்
பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஜி மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இரட்டை என்ஜினில் அரசாங்கம் என்று பிரதமர் குறிப்பிட்ட சிந்தனையை சரியாக பின்பற்றினால், அவரது நோக்கத்தை களத்தில் செயல்படுத்த முடியும். எங்களது பீகார் முதல், பீகாரி முதல் என்ற பார்வை ஆவணம் பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டுள்ளது. பீகார் மக்களுக்கும், எனக்கும் முதல்வரின் சாத் நிசே-2 மீது நம்பிக்கை இல்லை. பா.ஜ.க.வுடன் எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என லோக் ஜனசக்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.