வேண்டாம்.. வேண்டாம் என்றாலும் பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் சிராக் பஸ்வான்….

 

வேண்டாம்.. வேண்டாம் என்றாலும் பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் சிராக் பஸ்வான்….

பா.ஜ.க. தனது கட்சியை தாக்கிய போதிலும், மோடிக்கும், அந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்போம் என லோக் ஜன்சக்தியின் தலைவர் சிராக் பஸ்வான் உறுதியாக கூறுகிறார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் போட்டியிட விரும்பாத லோக் ஜன்சக்தி தேசிய ஜனநாயக கூட்டணியில் வெளியேறியது. அதேசமயம் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் ஆனால் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவோம் என லோக் ஜன்சக்தியின் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்தார்.

வேண்டாம்.. வேண்டாம் என்றாலும் பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் சிராக் பஸ்வான்….
சிராக் பஸ்வான்

ஆனால் தற்போது லோக் ஜன்சக்தி கட்சிக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். பிரதமர் மோடியும் வரும் 23ம் தேதியன்று பீகாரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். மொத்தம் 12 கூட்டங்களில் பேச உள்ளார் அதில் நிதிஷ் குமாரும் கலந்து கொள்கிறார். இந்த சூழ்நிலையிலும் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வை ஆதரிப்போம் என சிராக் பஸ்வான் உறுதியாக கூறியுள்ளார். சிராக் பஸ்வான் முன்னணி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

வேண்டாம்.. வேண்டாம் என்றாலும் பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் சிராக் பஸ்வான்….
பிரதமர் மோடி

பிரதமர் மோடி என் இதயத்தில் இருக்கிறார். நான் ஹனுமான் போன்றவன். அவர்கள் விரும்பினால், என் இதயத்தை திறந்து அதனை பார்க்கட்டும். எனக்கு பிரதமரின் படத்தை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நிதிஷ் குமாரின் அழுத்தம் காரணமாகத்தான் பிரதமர் மோடி 12 கூட்டங்களில் பேச உள்ளார். நவம்பர் 10ம் தேதிக்கு பிறகு பா.ஜ.க.-லோக் ஜன்சக்தி கூட்டணி அரசு அமையும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒருவேளை நிதிஷ் குமார் முதல்வரானால், நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர மாட்டோம், எதிர்க்கட்சி வரிசையில் அமரவே விரும்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.