புதிய இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வதே பயமாக இருக்கிறது! – காஷ்மீர் முன்னாள் முதல்வரின் மகள் ட்வீட்

 

புதிய இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வதே பயமாக இருக்கிறது! – காஷ்மீர் முன்னாள் முதல்வரின் மகள் ட்வீட்

புதிய இந்தியாவில் எதற்கெடுத்தாலும் இஸ்லாமியர்கள் மீது பழிபோடுவது தொடர்வதால் இஸ்லாமியராக வாழ்வதற்கே பயமாக இருக்கிறது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியின் மகள் ட்வீட் செய்துள்ளார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் யானை ஒன்று அன்னாசிப் பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்டது. ஆனால் சம்பவம் மலப்புரத்தில் நடந்ததாகவும், மலப்புரம் என்றாலே இப்படித்தான் என்றும் பா.ஜ.க தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அதிக அளவில் இந்துக்களும் மலப்புரத்தில் இஸ்லாமியர்களும் வாழ்வது குறிப்பிடத்தக்கது. யானை இறந்த விவகாரத்தை மதத்துடன் தொடர்புப்படுத்தி பலரும் பலவிதமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

புதிய இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வதே பயமாக இருக்கிறது! – காஷ்மீர் முன்னாள் முதல்வரின் மகள் ட்வீட்
இந்த நிலையில் இது குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவருமான மெகபூபா முஃப்தியின் மகள் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புதிய இந்தியாவில் முஸ்லீமாக இருப்பது பயத்துடன் வாழ்வதும், ஒருவரின் தோள்பட்டை மீது தொடர்ந்து பார்ப்பதும் போல் உள்ளது. கோவிட் வைரஸ் பரவினாலும் சரி யானை கொல்லப்பட்டாலும் சரி நாங்கள்தான் குற்றவாளிகள் ஆக்கப்படுகிறோம். இந்தியாவில் நடக்கும் அனைத்து பிரச்னைக்கும் அடிப்படை காரணமாக நாங்கள் சித்தரிக்கப்படுகிறோம். இந்த புதிய இனவெறி அமைப்பில் இஸ்லாமியர்கள் வில்லன்கள் ஆக்கப்படுகின்றனர்” என்று கூறியுள்ளார்.