• February
    29
    Saturday

Main Area

Main



கொதிக்கும் சாம்பாரில் குதித்த சிறுமி -உடல் வெந்து உயிரிழப்பு

மாதிரி படம்
மாதிரி படம்

தெலுங்கானாவின் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள அரசு நடத்தும் பள்ளியில் சூடான சாம்பார் அடங்கிய பாத்திரத்தில்  தற்செயலாக விழுந்து இரண்டு வயது சிறுமி உயிரை இழந்தார். சிறுமி உடனடியாக ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் பலியானார்

girl

ஹைதராபாத் (தெலுங்கானா): தெலுங்கானாவின் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வியாழக்கிழமை சூடான சாம்பார் அடங்கிய பெரிய பாத்திரத்தில்  தற்செயலாக விழுந்து இரண்டு வயது சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் காலை 11 மணியளவில் மதிய உணவு சாப்பிட்டபோது சாப்பாட்டு அறையில்  நிகழ்ந்தது . பெஞ்சில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென நழுவி பாத்திரத்தில்  விழுந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

police

 அப்போது  அவர் காயங்களுக்கு ஆளானார், என அவர்கள் மேலும் கூறினர். சிறுமியின் பெற்றோர் ஒரு பகுதிநேர அடிப்படையில் பள்ளியில் வேலை செய்கிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.