’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

 

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு இணையாகக் கருதப்பட்டவர் மிதாலி ராஜ்.

சச்சினைப் போலவே 16 வயதில் இந்திய அணிக்காக ஆடத் தொடங்கியவர் மிதாலி. ரன் வேட்டையில் மிதாலி இறங்கிவிட்டால் எதிரணியால் தடுத்து நிறுத்தவே முடியாது. மகளிர் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் (6295) எனும் பெருமையைச் சூடியுள்ளார்.

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

மிதாலியின் தலைமையில் 2016 ஆம் ஆண்டு பெண்கள் உலககோப்பையில் களம் கண்டது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. கடும்போராட்டத்தின் மத்தியில் இறுதிப்போட்டி வரை கொண்டுச்சென்றார்.

அர்ஜூனா விருது, பத்மஸ்ரீ விருதுகள் மிதாலி ராஜின் திறமைக்கு வீடு தேடி வந்தன. எளிய குடும்பத்தில் பிறந்து இத்தனை சாதனைக்கு உரிய மிதாலியின் சமீபத்திய ஆச்சர்ய மகிழ்ச்சிக்குக் காரணம் ஒரு பட்டியலில் அவர் இடம்பிடித்திருப்பதுதான்.

இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இந்நிலையில் ’மேக்கர்ஸ் இந்தியா’ வெளியிட்டிருக்கும் இந்தியாவுக்கு உலக அரங்கில் பெயர் வாங்கித் தந்த பெண்களின் பட்டியலில் பட்டியலில்தான் மிதாலி பெயர் உள்ளது.

பல்வேறு தடைகளைக் கடந்து, எதிர்ப்புகளைச் சந்தித்து, பாலின அழுத்தங்களை மீறி தனக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்ந்தவர்களின் பட்டியலே அது.

அந்தப் பட்டியலில் சகுந்தலா தேவி, மேரிகோம் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் மிதாலி ராஜ் இடம்பிடித்திருக்கிறார்.

இதை மகிழ்ச்சியுடன் மிதாலி ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறார். அதைப் பகிர்ந்துகொண்டு, ‘பெருமைபடுவதாக’ நடிகை டாப்ஸி குறிப்பிட்டுள்ளார். மிதாலி ராஜின் பயோபிக்கில் டாப்ஸி நடிக்கவிருப்பது தெரிந்திருக்கும்.