10 லட்சம் பாதிப்பு பட்டியலில் இணைந்த இரு நாடுகள்- உலகளவில் கொரோனா

 

10 லட்சம் பாதிப்பு பட்டியலில் இணைந்த இரு நாடுகள்- உலகளவில் கொரோனா

கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைவதுபோல இருந்தாலும், வேறு சில நாடுகளில் அதிகரிக்கிறது. இன்னும் சில நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கிவிட்டது. எப்படியிருந்தாலும் புதிய நோயாளிகள் எண்ணிக்கை விகிதம் குறைந்த பாடில்லை.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 65 லட்சத்து  14 ஆயிரத்து 071 பேர்.  கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 3 லட்சத்து 56 ஆயிரத்து 801 நபர்கள்.

10 லட்சம் பாதிப்பு பட்டியலில் இணைந்த இரு நாடுகள்- உலகளவில் கொரோனா

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 22 ஆயிரத்து 997 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 84,56,653 பேரும், இந்தியாவில் 75,97,063 பேரும், பிரேசில் நாட்டில்  52,51,127 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த மூன்று நாளுக்கு அடுத்து, பத்து லட்சம் பாதிப்புகளைக் கடந்த நாடு ரஷ்யா. அங்கே தற்போதைய பாதிப்பு 14,31,635. அங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 24,635 பேர். பத்து லட்சம் பாதிப்புகளைக் கடந்த நாடுகளின் பட்டியலில் சமீபத்தில் இரு நாடுகள் இணைந்துள்ளன.

10 லட்சம் பாதிப்பு பட்டியலில் இணைந்த இரு நாடுகள்- உலகளவில் கொரோனா

ஸ்பெயினில்  நேற்று கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை பத்து லட்சத்தைக் கடந்தது. இன்றைய அளவில் மொத்த பாதிப்பு 10,15,795. இறந்தவர்களின் எண்ணிக்கை 33,623 பேர்.

அடுத்து, இன்றைக்கு அந்தப் பட்டியலில் இணைந்த நாடு அர்ஜெண்டினா. அங்கு மொத்த பாதிப்பு 10,02,662. இறந்தவர்களின் எண்ணிக்கை 26,716 பேர்.

இந்த நாடுகளுக்கு அடுத்து விரைவில் பத்து லட்சம் பாதிப்புகளை நெருங்கி வரும் நாடுகள் கொலம்பியா, பிரான்ஸ்.