போலாம் ரைட்… சிக்னல் கொடுத்த விஜய்… வேட்பாளர்கள் ரெடி – பரபர பட்டியல்!

 

போலாம் ரைட்… சிக்னல் கொடுத்த விஜய்… வேட்பாளர்கள் ரெடி – பரபர பட்டியல்!

வழக்கமான உள்ளாட்சி தேர்தல் போல் அல்லாமல் இம்முறை நடைபெறும் தேர்தல் கொஞ்சம் ஸ்பெஷல். ஏனென்றால் ரசிகர்களால் “வாழும் அண்ணா-துரை” என்றழைக்கப்படும் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் களமிறங்குகிறது என்பதே அதற்குக் காரணம். ஏற்கெனவே எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என நடிகர்கள் அரசியலில் கோலோச்சினர். சமீபத்திய என்ட்ரியாக கமலும் ஏதோ அதிர்வுகளைக் கிளப்ப வித்தைகள் செய்து கொண்டிருக்கிறார். இந்த வரிசையில் ரஜினியை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. அவர் வேற டாபிக்.

போலாம் ரைட்… சிக்னல் கொடுத்த விஜய்… வேட்பாளர்கள் ரெடி – பரபர பட்டியல்!

தமிழ்நாட்டு அரசியல் எப்போதுமே உள்ளாட்சியின் வார்டுகளிலிருந்து தான் ஆரம்பிக்கும். எம்ஜிஆர் என்ற நாயக பிம்பம் இருந்தாலும் உள்ளாட்சியில் பலப்படுத்தியதால் தான் அவர் ஆரம்பித்த அதிமுக வெற்றியை உரித்தாக்கியது. இதை விஜய் சரியாகப் புரிந்து கொண்டாரோ என்ற ஆச்சரியம் மேலோங்குகிறது. ஏற்கெனவே சினிமாவில் எம்ஜிஆரை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பவர் விஜய். தற்போது அரசியலிலும் எம்ஜிஆரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டாரா என தோன்றாமல் இல்லை. கமல் கூட மக்களவை, சட்டப்பேரவை என பெரிய தேர்தல்களிலேயே களமாடினார்.

போலாம் ரைட்… சிக்னல் கொடுத்த விஜய்… வேட்பாளர்கள் ரெடி – பரபர பட்டியல்!

ஆனால் விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சியை டார்கெட் செய்கிறது. அரசியலின் வேரை தேடி ஓடுகிறார். நேற்று தான் இந்த அறிவிப்பு வெளியானது. சென்னையை அடுத்துள்ள பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்தின் தலைமையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட நிர்வாகிகளுடன் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதில் தான் சுயேச்சையாகப் போட்டியிடலாம் என்ற முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போலாம் ரைட்… சிக்னல் கொடுத்த விஜய்… வேட்பாளர்கள் ரெடி – பரபர பட்டியல்!

ஆனால் அவர்களோ அடுத்தக்கட்டத்தை நோக்கி புறப்பட்டு விட்டார்கள் என தற்போதைய தகவல் சொல்கிறது. ஆம் செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. பெரியவெளிக்காடு ஊராட்சி மன்ற 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுதா, கொடூர் ஊராட்சியில் 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இயக்கத்தின் கிளை தலைவர் சத்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

போலாம் ரைட்… சிக்னல் கொடுத்த விஜய்… வேட்பாளர்கள் ரெடி – பரபர பட்டியல்!

அதேபோல பரமேஸ்வரிமங்கலம் ஊராட்சியில் 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அப்பகுதி கிளை தலைவர் பாலாஜி என்பவரும் நீலமங்கலம் ஊராட்சியில் 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒன்றிய இணை செயலாளர் திருநாவுக்கரசும் களமிறங்குகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடப் போவதாகவும் அடுத்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை அளிக்கிறது.