தமிழ்நாட்டை முந்திய மாநிலம் இதுதான் – ஆக்டிவ் கேஸஸ் பட்டியல்

 

தமிழ்நாட்டை முந்திய மாநிலம் இதுதான் – ஆக்டிவ் கேஸஸ் பட்டியல்

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகளவில் மூன்றாம் இடத்தில் இருந்தாலும் புதிய நோயாளிகள் அதிகரிப்பது இந்தியாவில்தான் அதிகம். இதனால் இன்னும் ஒரு வாரத்தில் பிரேசிலை முந்திவிடும் அபாயம் உள்ளது.

இந்தியாவில் 36,87,939 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  

தமிழ்நாட்டை முந்திய மாநிலம் இதுதான் – ஆக்டிவ் கேஸஸ் பட்டியல்

இந்திய அளவில். கொரோனா நோய்த் தொற்றில் அதிகமான ஆக்டிவ் கேஸஸ் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் நான்காம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு இறங்கியுள்ளது. நான்காம் இடத்தை தற்போது பிடித்துள்ள மாநிலம் உத்திரபிரதேசம். இந்தப் பட்டியல் மத்திய அரசு நேற்றையை (31/08/2020) நிலவரப்படி கொடுத்திருப்பதன் அடிப்படையில்.

முதல் இடம்: இந்தியாவில் கொரோனா நோய்ப் பரவல் தொடங்கியது முதலே மகாராஷ்டிரா மாநிலமே முதல் இடத்தில் உள்ளது. இங்கு மொத்த பாதிப்பு 7,80,689. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 5,62,401. இறந்தவர்களின் எண்ணிக்கை 24,399. தற்போது சிகிச்சையில் இருப்போர் 1,93,889 பேர்.

தமிழ்நாட்டை முந்திய மாநிலம் இதுதான் – ஆக்டிவ் கேஸஸ் பட்டியல்

இரண்டாம் இடம்: ஆந்திர பிரதேசம், தொடக்கத்தில் கட்டுக்குள் வைத்திருந்தது. அதற்கான பாராட்டுகளை வாங்கிக்கொண்டிருந்த நிலையில் திடீரென்று அங்கு தொற்று அதிகரித்தது. கடந்த இரு மாதமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இங்கு மொத்த பாதிப்பு 4,.24,767. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 3,21,754. இறந்தவர்களின் எண்ணிக்கை 3,884. தற்போது சிகிச்சையில் இருப்போர் 99,129 பேர்.

மூன்றாம் இடம்: கர்நாடகா. ஆந்திராவைப் போன்றுதான் கர்நாடகமும். தொடக்கத்தின் கட்டுக்குள் இருந்த நோய்த் தொற்று கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வருகிறது. இங்கு மொத்த பாதிப்பு 3.35,928. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 2,24,229. இறந்தவர்களின் எண்ணிக்கை 5,589. தற்போது சிகிச்சையில் இருப்போர் 85,110 பேர்.

தமிழ்நாட்டை முந்திய மாநிலம் இதுதான் – ஆக்டிவ் கேஸஸ் பட்டியல்

நான்காம் இடம்:உத்திர பிரதேசம் – 5-ம் இடத்தில் இருந்த இந்த மாநிலம் தற்போது நான்காம் இடம். இங்கு மொத்த பாதிப்பு 2,25,632. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 1,67,543. இறந்தவர்களின் எண்ணிக்கை 3,423. தற்போது சிகிச்சையில் இருப்போர் 54,666 பேர்.

ஐந்தாம் இடம்: தமிழ்நாடு – 4-ம் இடத்தில் தொடர்ந்து இருந்த தமிழ்நாடு, தற்போது 5-ம் இடத்தில் உள்ளது. இங்கு மொத்த பாதிப்பு 4,22,085. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 3,62,133. இறந்தவர்களின் எண்ணிக்கை 7,231. தற்போது சிகிச்சையில் இருப்போர் 52,721 பேர்.

தமிழ்நாட்டை முந்திய மாநிலம் இதுதான் – ஆக்டிவ் கேஸஸ் பட்டியல்

இந்த ஐந்து மாநிலங்களை அடுத்து இடங்களில் 6-ம் இடத்தில் தெலுங்கானா, 7-ம் இடத்தில் ஒடிஷா, 8-ம் இடத்தில் மேற்கு வங்கம், 9-ம் இடத்தில் கேரளா, 10- இடத்தில் அசாம் மாநிலமும் உள்ளன.