ஆக்டிவ் கேஸஸ் பட்டியல்: முதல் 10 இடங்களில் 5 தென்னிந்திய மாநிலங்கள்

 

ஆக்டிவ் கேஸஸ் பட்டியல்: முதல் 10 இடங்களில் 5 தென்னிந்திய மாநிலங்கள்

இந்தியாவில் 34,63,972 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று மட்டும் 76,472 பேர் புதிய நோயாளிகளாக இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளனர். உலகளவில் புதிய கொரோனா நோயாளிகள் அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் முதலாம் இடத்தில் இந்தியா இருக்கிறது.

இந்திய அளவில். கொரோனா நோய்த் தொற்றில் அதிகமான ஆக்டிவ் கேஸஸ் உள்ள மாநிலங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் 5 மாநிங்கள் தென்னிந்திய மாநிலங்கள் என்று பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தப் பட்டியல் மத்திய அரசு நேற்றையை (28/08/2020) நிலவரப்படி கொடுத்திருப்பதன் அடிப்படையில்.

ஆக்டிவ் கேஸஸ் பட்டியல்: முதல் 10 இடங்களில் 5 தென்னிந்திய மாநிலங்கள்
(ANI Photo)

முதல் இடம்: கொரோனா நோய்த்தொற்று தொடங்கிய நாள்முதலே மகாராஷ்டிரா மாநிலமே முதல் இடத்தில் இருக்கிறது. இங்கு மொத்த பாதிப்பு 7.33,568. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 5,31,563. இறந்தவர்களின் எண்ணிக்கை 23,444. தற்போது சிகிச்சையில் இருப்போர் 1,78,561 பேர்.

இரண்டாம் இடம்: ஆந்திர பிரதேசம், தொடக்கத்தில் கட்டுக்குள் வைத்திருந்தாலும் கடந்த இரு மாதமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு மொத்த பாதிப்பு 3,.93,090. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 2,95,248. இறந்தவர்களின் எண்ணிக்கை 3,633. தற்போது சிகிச்சையில் இருப்போர் 94,209 பேர்.

ஆக்டிவ் கேஸஸ் பட்டியல்: முதல் 10 இடங்களில் 5 தென்னிந்திய மாநிலங்கள்

மூன்றாம் இடம்: கர்நாடகா. இங்கும் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த நோய்த் தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இங்கு மொத்த பாதிப்பு 3.09,972. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 2,19,554. இறந்தவர்களின் எண்ணிக்கை 5,232. தற்போது சிகிச்சையில் இருப்போர் 85,006 பேர்.

நான்காம் இடம்: கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து நான்காம் இடத்திலேயே உள்ளது தமிழ்நாடு. இங்கு மொத்த பாதிப்பு 4,03,242. குணம் அடைந்திருப்பவர்களின் எண்ணிக்கை 3,43,930. இறந்தவர்களின் எண்ணிக்கை 6,948. தற்போது சிகிச்சையில் இருப்போர் 52,364 பேர்.

இந்த நான்கு மாநிலங்களை அடுத்து இடங்களில் 5-ம் இடத்தில் உத்திரப்பிரதேசம், 6-ம் இடத்தில் தெலுங்கானா, 7-ம் இடத்தில் மேற்கு வங்கம், 8-ம் இடத்தில் ஒடிசா, 9-ம் இடத்தில் கேரளா, 10- இடத்தில் அசாம் மாநிலமும் உள்ளன.

ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களும் முதல் பத்து இடங்களில் இருப்பதும் நாள்தோறும் புதிய நோயாளிகள் அதிகரிப்பதும் வருதத்துக்கு உரியது. .