டாஸ்மாக்கில் ஒரேநாளில் லாபம் பார்த்த தமிழக அரசு!

 

டாஸ்மாக்கில் ஒரேநாளில் லாபம் பார்த்த தமிழக அரசு!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி நாளை முதல் வாடகை டாக்ஸி ,ஆட்டோ உள்ளிட்டவை இயங்காது என்றும் மளிகை பலசரக்குகள், காய்கறிகள் , இறைச்சி, மீன் கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் ஒரேநாளில் லாபம் பார்த்த தமிழக அரசு!

அத்துடன் முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து குடிமகன்கள் டாஸ்மாக் கடை வாசலில் வரிசையில் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

டாஸ்மாக்கில் ஒரேநாளில் லாபம் பார்த்த தமிழக அரசு!

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் மது விற்பனை அதிகரித்துள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.100.43 கோடி மது விற்பனையாகியுள்ளது. அதேபோல் திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரையில் சுமார் 87.28 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன்
கோவை மாவட்டத்தில் சுமார் 76.12 கோடிக்கு மது விற்பனை நடைப்பெற்றுள்ளது. இதனால் டாஸ்மாக் மூலம் மட்டுமே தமிழக அரசுக்கு கணிசமான வருவாய் ஏற்பட்டுள்ளது.