இடோக்கன் வழங்கும் செயலி வேக வேகமாக டவுன்லோடு … 2 மாத தாகத்தை தீர்த்த கேரள குடிமகன்கள்..

இடோக்கன் வழங்கும் செயலி வேக வேகமாக டவுன்லோடு … 2 மாத தாகத்தை தீர்த்த கேரள குடிமகன்கள்..

கேரளாவில் சுமார் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று மதுக் கடைகள் திறக்கப்பட்டன. மது கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக மொபைல் ஆப் வாயிலாக இடோக்கன் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்தது. இதனையடுத்து பெவ்க்யூ என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்தது. மது வாங்க விரும்பவர்கள் முதலில் செயலியை தங்களது மொபைலில் டவுன்லோட் செய்ய வேண்டும். பின் விவரங்களை பதிவு செய்து இடோக்கன் பெற வேண்டும்.

இடோக்கன் வழங்கும் செயலி வேக வேகமாக டவுன்லோடு … 2 மாத தாகத்தை தீர்த்த கேரள குடிமகன்கள்..

பின் டோக்கன்படி குறிப்பிட்ட நேரத்துக்கு மதுபான கடைக்கு சென்று மதுபானம் வாங்கி கொள்ளலாம். கூகுள் ப்ளேஸ்டோரில் அறிமுகமான சில மணி நேரங்களிலேயே 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி வாயிலாக இ டோக்கன் பெற்றவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு மது கடைகளுக்கு சென்று மதுபானங்களை வாங்கி சென்றனர். அதேசமயம் சிலர் ஆப்பை டவுன்லோட் செய்த பிறகு பதிவு செய்வதற்கான ஓ.டி.பி. செயல்முறை இயங்கவில்லை, பாஸ்வேர்டு பெறுவதற்காக சுமார் 30 நிமிடம் காத்திருந்தும் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

இடோக்கன் வழங்கும் செயலி வேக வேகமாக டவுன்லோடு … 2 மாத தாகத்தை தீர்த்த கேரள குடிமகன்கள்..

பெவ்க்யூ செயலி குறித்து புகார்கள் வந்துள்ளதால், குறைபாடுகளை நீக்க அந்த செயலியில் சில புதுப்பிப்புகள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெவ்க்யூ ஆப்பில் பதிவு செய்து இடோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுகிறது. இன்று டோக்கன் பெற்று மது வாங்கினால், 5 நாட்களுக்கு பிறகே அடுத்து டோக்கன் வாங்க முடியும் வகையில் அந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.