“இதற்கு உத்தரவாதம் கொடுத்தால் டாஸ்மாக்கை மூட சொல்லலாம்”

 

“இதற்கு உத்தரவாதம் கொடுத்தால் டாஸ்மாக்கை மூட சொல்லலாம்”

தமிழ்நாட்டிலும் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அரசு அனுமதியளித்தது. இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மதுக்கடை திறப்புக்கு எதிராகப் போராடிவிட்டு இப்போது திறப்பது ஏன் என எதிர்க்கட்சியான பாஜக கேள்வியெழுப்பியது.

“இதற்கு உத்தரவாதம் கொடுத்தால் டாஸ்மாக்கை மூட சொல்லலாம்”

இதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் நேற்று பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்குப் பதிலடி கொடுத்த அமைச்சர்கள், “தொற்று பரவல் பெருமளவு குறைந்த பின் தான் டாஸ்மாக் கடைகளைத் திறந்திருக்கிறோம். கடந்தாண்டு பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக ஆட்சியின்போது பாஜகவினர் அமைதியாக இருந்துவிட்டு இப்போது போராட்டம் நடத்துவது ஏன்? பாஜக கூட்டணி கட்சி ஆளும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்திருப்பதை எதிர்த்து ஏன் தமிழ்நாடு பாஜகவினர் குரல் கொடுக்கவில்லை” என கிடுக்குப்புடி கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

“இதற்கு உத்தரவாதம் கொடுத்தால் டாஸ்மாக்கை மூட சொல்லலாம்”

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ” மதுக் கடைகள் வேண்டாம், மது விலக்கு வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. ஆனால் கள்ளச்சாராயம் பெருகாது என்று நீங்கள் உத்தரவாதம் கொடுத்தால் கடையைத் திறக்கக் கூடாது என்று நான் சொல்ல தயார். மதுக் கடைகளைத் திறப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, ஆனால் அரசால் என்ன செய்ய முடியும்” என்றார்.