• February
    24
    Monday

Main Area

Main



தீபாவளி கொண்டாட்டம்: டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு சாதனை!

Tasmac
Tasmac

டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது மது விற்பனை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

tasmac

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. கடந்த 25-10-2019 = 100 கோடி, 26-10-2019 = 183 கோடி, 27-10-2019 = 172 கோடி ஆக மொத்தம் 455 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 325 கோடி ரூபாய் விற்ற நிலையில் இந்த வருடம் 455 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை விற்று தமிழக அரசு சாதனைப் படைத்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.