நேற்று ஒரேநாளில் ரூ.243 கோடிக்கு மது விற்பனை : முதலிடத்தை பிடித்த மாவட்டம் எது?

நேற்று ஒரேநாளில் ரூ.243 கோடிக்கு மது விற்பனை : முதலிடத்தை பிடித்த மாவட்டம் எது?

தமிழகம் முழுவதும் இன்று எந்தவித தளர்வும் இல்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் இன்று முழுவதும் மூடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த முழு முடக்கத்தால் தொற்று கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

நேற்று ஒரேநாளில் ரூ.243 கோடிக்கு மது விற்பனை : முதலிடத்தை பிடித்த மாவட்டம் எது?

இந்நிலையில் பொதுமுடக்கத்தால் மதுக்கடைகளும் மூடப்படுவது வழக்கம். இதனால் ‘குடி’மகன்கள் நேற்று ஒரேநாளில் மதுவை வாங்கி தீர்த்துள்ளனர். நேற்று ஒரே நாளில் ரூ.243.12 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று ஒரேநாளில் ரூ.243 கோடிக்கு மது விற்பனை : முதலிடத்தை பிடித்த மாவட்டம் எது?

சென்னை மண்டலம் – ரூ.52.50 கோடி, திருச்சி – ரூ.48.26 கோடி, மதுரை – ரூ.49.75 கோடி, சேலம் – ரூ.47.38 கோடி மற்றும் கோவையில் – ரூ.45.23 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் மதுரை மதுவிற்பனையில் முன்னணியில் இருக்கும் நிலையில் இந்த முறை மதுரையை பின்னுக்கு தள்ளி சென்னை முதலிடத்தை பெற்றுள்ளது.