“கமலுக்கு தெரிந்தது லிப் சர்வீஸ் தான் ” வானதி சீனிவாசன் சர்ச்சை பேச்சு!

 

“கமலுக்கு தெரிந்தது லிப் சர்வீஸ் தான் ” வானதி சீனிவாசன் சர்ச்சை பேச்சு!

உதட்டளவில் மட்டுமே சேவை செய்பவர் கமல் ஹாசன் என பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் விமர்சித்துள்ளார்.

“கமலுக்கு தெரிந்தது லிப் சர்வீஸ் தான் ” வானதி சீனிவாசன் சர்ச்சை பேச்சு!

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி , இந்த தொகுதியை பற்றி கமலுக்கு என்ன தெரியும்? இங்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து வானதி சீனிவாசனுடன் கமல் விவாதம் செய்யத் தயாரா ? என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், முதலில் மோடி மற்றும் அமைச்சர்களுடன் விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும். பிறகு வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் விவாதிக்கலாம் என்று கூறியிருந்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த வானதி, என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்கிறார்கள் என்றால் பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? ஒரு பெண் சாதாரண குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வரும்போது இப்படி தான் கேவலப்படுவார்களா?என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

“கமலுக்கு தெரிந்தது லிப் சர்வீஸ் தான் ” வானதி சீனிவாசன் சர்ச்சை பேச்சு!

இந்நிலையில் நேற்று கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட சொர்ணாம்பிகை லேஅவுட் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கமல் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார். அதில்,” என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று கூறும் மக்கள் நீதி மய்யம் தலைவரை பார்த்து நான் கேட்கிறேன். இதுவரை நீங்கள் லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வருகிறீர்கள். லிப் சர்வீஸ் என்றால் இரண்டு அர்த்தம் உண்டு .ஒன்று உதட்டளவில் மட்டும் சேவை செய்வது; மற்றொன்று உதடுகளுக்கு மட்டும் சேவை செய்வது. அதை மட்டுமே செய்யும் நீங்கள் என்னை எப்படி துக்கடா அரசியல்வாதி என்று சொல்லலாம்? மக்களே நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் வாக்குகளின் மூலம் கமலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.