“எனக்கே ஸ்கெட்ச் போடுறீங்ளா” – லிங்காயத் மடாதிபதிகளை வைத்து ஆர்எஸ்எஸ்-க்கு எடியூரப்பா எச்சரிக்கை!

“எனக்கே ஸ்கெட்ச் போடுறீங்ளா” – லிங்காயத் மடாதிபதிகளை வைத்து ஆர்எஸ்எஸ்-க்கு எடியூரப்பா எச்சரிக்கை!

2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்தது கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த ஆட்சி 2019ஆம் ஆண்டு கவிழ்ந்தது. தொடர்ந்து பாஜக தலைமையிலான ஆட்சி கர்நாடகாவில் அமைந்தது. இதில் எடியூரப்பா அம்மாநில முதல்வராக பதவியேற்றார். கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா அதிகம் தலையிடுவதாக புகார் எழுந்தது.

“எனக்கே ஸ்கெட்ச் போடுறீங்ளா” – லிங்காயத் மடாதிபதிகளை வைத்து ஆர்எஸ்எஸ்-க்கு எடியூரப்பா எச்சரிக்கை!

இந்நிலையில் மூத்த நிர்வாகிகள் எடியூரப்பா மீது கோபத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் பெரும்பாலான பாஜக எம்எல்ஏக்கள் எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 16ஆம் தேதி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அத்துடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரையும் சந்தித்தார்.

“எனக்கே ஸ்கெட்ச் போடுறீங்ளா” – லிங்காயத் மடாதிபதிகளை வைத்து ஆர்எஸ்எஸ்-க்கு எடியூரப்பா எச்சரிக்கை!

சந்திப்பிற்குப் பின்னர் எடியூரப்பா உடல்நிலை காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. ராஜினாமா செய்யப் போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்திருந்தார். இதனிடயே அவர் முதல்வராகப் பொறுப்பேற்று ஜூலை 26ஆம் தேதியோடு இரண்டு ஆண்டுகள் முடிவடையவிருப்பதால், அன்றைய தினம் ராஜினாமா செய்கிறார் என மற்றொரு தகவலும் பரவி வருகிறது.

“எனக்கே ஸ்கெட்ச் போடுறீங்ளா” – லிங்காயத் மடாதிபதிகளை வைத்து ஆர்எஸ்எஸ்-க்கு எடியூரப்பா எச்சரிக்கை!

இச்சூழலில் இன்று அவர் பிரபலமான 7 மடங்களைச் சேர்ந்த லிங்காயத் மடாதிபதிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மடாதிபதிகளுடன் தனக்கு இருக்கும் ஆதரவை வலுப்படுத்திக் கொள்ள இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அவரின் இந்நகரவு தன்னை பதவியிலிருந்து தூக்க ஸ்கெட்ச் போட்ட ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைமைக்கு மறைகமுக விடுத்த சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மாநிலத்தின் மக்கள்தொகையில் 16 சதவீதம் பேர் வீரஷைவ-லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தாம். பாஜகவுக்கு பெரியளவில் ஆதரவு இச்சமூகத்தில் இருக்கிறது.

“எனக்கே ஸ்கெட்ச் போடுறீங்ளா” – லிங்காயத் மடாதிபதிகளை வைத்து ஆர்எஸ்எஸ்-க்கு எடியூரப்பா எச்சரிக்கை!

ஆகவே அதே சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு மதத் தலைவர்களின் ஆதரவு இருப்பதாக டெல்லி தலைமைக்கு சிக்னல் கொடுத்திருக்கிறார். இச்சந்திப்பிற்குப் பின் பேசிய வீர சோமேஸ்வர சிவாச்சார்ய சுவாமி, “அரசியலில் முட்டல், மோதல்கள் இருக்க தான் செய்யும். எடியூரப்பா மீது யார் என்ன சொன்னாலும் அவர் தனது பதவிக்காலத்தை வெற்றிக்கரமாக நிறைவு செய்வார் என எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை இதை காரணமாகக் கூறி முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால் பாஜக கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று கூறினார். ஆகவே எடியூரப்பாவின் இந்த அரசியல் நகர்வு டெல்லியிலும் நாக்பூரிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.