டாஸ்மாக் கடைகளிலும் கட்டுப்பாடு… செம ஷாக்கில் குடிமகன்கள்!

 

டாஸ்மாக் கடைகளிலும் கட்டுப்பாடு… செம ஷாக்கில் குடிமகன்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கட்டுப்பாடுகளை கடுமையாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளுக்கும் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. காலை 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். ஆனால், தற்போது இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் டாஸ்மாக் கடைகள் 9 மணிக்கே மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது.

டாஸ்மாக் கடைகளிலும் கட்டுப்பாடு… செம ஷாக்கில் குடிமகன்கள்!

மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதால் அன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு மேலும் சில கட்டுப்பாடுகள் விதித்து டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மது கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலில் இருக்கக்கூடாது. மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்பட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மதுபானங்களை மொத்த விற்பனை செய்யக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளிலும் கட்டுப்பாடு… செம ஷாக்கில் குடிமகன்கள்!

கடந்த 8ம் தேதி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போது, லிஸ்ட்டில் தப்பியது டாஸ்மாக்குகள் மட்டும் தான். இதனால் குடிமகன்கள் குஷியாக இருந்தனர். தற்போது டாஸ்மாக்குகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குடிமகன்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.