குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி…டாஸ்மாக்குகளில் மீண்டும் கட்டுப்பாடு?

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி…டாஸ்மாக்குகளில் மீண்டும் கட்டுப்பாடு?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வரும் நிலையில் ஹோட்டல்கள், கோவில்கள், தியேட்டர்கள் என அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விட்டது. இதில் தப்பியது டாஸ்மாக்குகள் மட்டும் தான். சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிடும் குடிமகன்கள் வழக்கம் போல கூட்டம் கூட்டமாக சென்று மது வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி…டாஸ்மாக்குகளில் மீண்டும் கட்டுப்பாடு?

கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகள் இல்லாமல் குடிமகன்கள் பலர், ஆல்கஹால் கலந்த சானிடைசரை குடித்த சம்பவங்கள் பல அரங்கேறின. கொரோனாவால் மூடப்பட்ட டாஸ்மாக்குகள் சில மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட போது, பல மணி நேரம் வரிசையில் காத்துக் கிடந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். அச்சமயம் குடிமகன்களின் பாடு திண்டாட்டம் ஆனது.

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி…டாஸ்மாக்குகளில் மீண்டும் கட்டுப்பாடு?

இந்த நிலையில், கொரோனா காரணமாக டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் முறையைச் செயல்படுத்த வேண்டுமென டாஸ்மாக் ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் திருச்செல்வன் கோரிக்கை விடுத்துள்ளார். சுகாதாரமற்ற டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்றும் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி நேரம் வரை எனக் குறைக்க வேண்டுமென்றும் அவர் கோரியுள்ளார். இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு டாஸ்மாக் கடைகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.