திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்!

 

திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்ததால் தளர்வுகளுடன் கூடிய 7ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு முடிவடையவிருந்த நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடனும் மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்கள் நேற்று மாலை வெளியாகின. அதில் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், படபிடிப்பு உள்ளிட்ட அனைத்தும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் பள்ளி கல்லூரிகள், தியேட்டர்கள் மற்றும் ரயில் சேவைக்கான தடை தொடருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்!

அதன் படி தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ள பேருந்துகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட எல்லாவற்றிலும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது. இந்த நிலையில், திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கான முந்தைய கட்டுப்பாடுகள் தொடருவதாக அரசு அறிவித்துள்ளது.

திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்!

அதாவது, திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கும், இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் முந்தைய நடைமுறை தொடருவதாக தெரிவித்துள்ளது.