ஹிட்லரின் சுயசரிதையை சேர்ப்பார்கள் போல… சி.பி.எஸ்.இ பாடங்கள் நீக்கம் குறித்து கமல் நக்கல்

மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்க மதச்சார்பின்மை, குடியுரிமை உள்ளிட்ட பாடங்களை நீக்குவதாக சி.பி.எஸ்.இ அறிவித்திருப்பதை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மிகக் கடுமையாக கிண்டல் செய்வது போல விமர்சித்துள்ளார்.

http://


அவர் வெளியிட்டுள்ள ட்வீடில், “மாணவர்களுக்கு பாடச் சுமையைக் குறைக்க மதச்சார்பின்மை, குடியுரிமை, ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜிஎஸ்டி பாடங்கள் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

அநேகமாக மாணவர்களின் பாடச் சுமையைக் குறைத்து மன அழுத்தத்தைப் போக்க Mein Kampf (ஹிட்லரின் சுயசரிதை), the History of Ku Klux Klan (அமெரிக்க கறுப்பினத்தவருக்கு எதிரான இனவெறியர் பற்றிய கதை), Marquis De Sade’s Justine (குற்றமிழைத்தல் தொடர்பான பிரெஞ்சு நாவல்) போன்றவற்றை சேர்ப்பார்கள் போல” எனக் கூறியுள்ளார்.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!