வீட்டில் எந்த இடத்தில் விளக்கேற்றினால் ஆயுள்விருத்தி அடையும்!

 

வீட்டில் எந்த இடத்தில் விளக்கேற்றினால் ஆயுள்விருத்தி அடையும்!

தெய்வ வழிபாட்டில் மிகவும் முக்கியமானது விளக்கை ஏற்றி சாமி கும்பிடுவது. நற்காரியங்களிலும் சரி துர்காரியங்களிலும் சரி தீபம் ஏற்றுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. விளக்குச் சுடரில் அம்பிகை குடி கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். அதனால் தான் நவராத்திரி தினங்களில் அம்மன் வழிபாடு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

வீட்டில் எந்த இடத்தில் விளக்கேற்றினால் ஆயுள்விருத்தி அடையும்!

விளக்கு ஏற்றுவது என்பது ஒருபுறமிருந்தாலும் அகண்ட தீபம் ஏற்றி வழிபடும் முறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அகண்ட தீபம் என்பது அகலமான பாத்திரத்தில் அல்லது விளக்கில் தீபம் ஏற்றுவது என்று பொருளாகாது . ஒரு தீபத்தை எப்படி அணைய விடாமல் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அகண்ட தீபம்.குறிப்பாக நவராத்திரியில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் மாலையிலிருந்து தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது.

வீட்டில் எந்த இடத்தில் விளக்கேற்றினால் ஆயுள்விருத்தி அடையும்!

வெள்ளி அல்லது பித்தளை விளக்கு அல்லது அகல் விளக்கில் தீபம் ஏற்றலாம். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அகண்ட தீபம் ஏற்றி வருவது குடும்பத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக நவராத்திரிகள் வரும் செவ்வாய்க்கிழமை அல்லது நவராத்திரியின் கடைசி 3 நாட்களில் அகண்ட தீபம் ஏற்றலாம். பூஜைகள் முடிந்தபிறகு இந்த விளக்குகளை தானமாகவே வழங்கலாம். அகண்ட தீபம் ஏற்றி இறைவனை வழிபடும்போது தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் வீட்டில் சேரும். கடன் தொல்லையில் இருந்து எளிதில் மீண்டு விடுவீர்கள். அதேபோல் கஷ்டங்களில் இருந்து விடுபடுவீர்கள்.

வீட்டில் எந்த இடத்தில் விளக்கேற்றினால் ஆயுள்விருத்தி அடையும்!

குறிப்பாக சிலருக்கு வீட்டில் எந்த இடங்களில் தீபமேற்ற வேண்டும் என்ற சந்தேகம் இருக்கும். கோலம் இடப்பட்ட வாசலில் விளக்கு ஏற்றி வைத்தால் அது லட்சுமி கடாட்சம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் பூஜை அறையில் இரண்டு விளக்குகள் ஏற்றி வணங்கலாம். சமையலறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது என்பது ஐதீகம்.வெளிப்புறத்தில் தீபமேற்றி வழிபடும் போது அது எமனை வேண்டி ஏற்றப்படும் தீபம் ஆக கருதப்படுகிறது. இதனால் மரண பயம் நீங்கி நமக்கு ஆயுள்விருத்தி உண்டாகும். திண்ணைகளில் ஏற்றப்படும் தீபம் தீயவர்களை அழிக்கும். அதேபோல் மாடத்தில் ஏற்றப்படும் தீபம் சிறந்த பலனைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.