எந்த விட்டமின் எடுத்து கொண்டால் உயரமாய் வளரலாம் தெரியுமா ?
பொதுவாக உயரம் குறைவாக இருக்கும் சிலர் தங்களின் குறைவான உயரத்தை கண்டு தாழ்வு மனப்பான்மை கொள்கின்றனர் .இப்படி நினைப்போருக்கு உயரமாக வளர சில உயர்வான யோசனைகளை இப்பதிவில் நாங்கள் கூறுகின்றோம்
1.ஒரு மனிதனின் உயரத்தில் 60-80% அவரின் பரம்பரை ஜீன்ஸால் தீர்மானிக்கப்படுகிறது,
2.மீதமுள்ள 40-20% மட்டும்தான் நம் கைகளில் உள்ளது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
3.ஒருவருக்கு அவரின் வளரும் வயதில் உடலுக்கு போதுமான அளவு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படவேண்டும்
4.அதனால் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் டி மற்றும் கால்சியம் ஆகியவற்றை சரியான அளவில் எடுத்துக்கொள்வது அவசியமான ஒன்று
5.ஒருவர் உயரமாக வளர வேண்டுமானால் போதுமான தூக்கம் இருக்க வேண்டும் ,மேலும் அவர் சரியான தோரணையில் தூங்குவது அவசியமான ஒன்று .
6.ஒருவர் உயரமாக வளர அவர் நிற்கும் போதும் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும்,
7.ஒருவர் சீக்கிரம் வளர, அவர் நடக்கும்போது, நிற்கும்போது வளைந்த நிலையில் இருக்கக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் .