அல்சரால் துடிக்கிறவங்க இதை படிச்சா ,அஞ்சாமல் அடிச்சி விரட்டலாம்

 
ulcer

அல்சரை பொதுவாக மூன்று வகையாக பிரிக்கலாம். இரைப்பை அல்சர்(gastric ulcers), ஓசோஃபேஜியல் அல்சர் (oesophageal ulcers) மற்றும் டியோடெனல் அல்சர் (duodenal ulcers) என மூன்று வகைகள் உள்ளன. இந்த மூன்று வகைகளின் அறிகுறிகள் பொதுவாக ஒன்று போலவே இருக்கின்றன.

அல்சர் ஏற்பட்டால், வயிற்றில் வீக்கம் அல்லது வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, நெஞ்சு எரிச்சல், குமட்டல், நெஞ்சு வலி, எடை குறைதல் உட்பட பல அறிகுறிகள் ஏற்படுகின்றன.

அல்சர் இருப்பது தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. அத்துடன் நமது உணவு முறைகளில் சில மாறுதல்களை செய்ய வேண்டும்.

பாலுடன் இரண்டு மூன்று வாழைப்பழங்களையும் சாப்பிடலாம். பச்சை வாழைப்பழம் அல்சருக்கு அருமருத்தாக செயல்படும்.

நெல்லிக்காய் சாறு அல்சருக்கு நல்ல நிவாரணியாக செயல்படும். அதே போல், வில்வ பழங்களும் நல்ல பலனைத் தரும். குளிர்ந்த பாதாம் பால் குடிப்பது அல்சரினால் ஏற்படும் வலியைக் குறைக்கும்.

மாதுளம் பழ ஜூஸ் குடிப்பது அல்சருக்கு அருமையான நிவாரணம் கொடுக்கும் என்றால்,அகத்திக் கீரை புண்களை விரைவில் ஆற்றும்பாசிப் பருப்புடன் அத்திக் காயை கூட்டாக சமைத்து உண்டால் அல்சர் புண்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும். உலர்ந்த திராட்சைப் பழங்களை அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.

தினமும் மூன்று வேளை உணவு கட்டாயம். அதிலும் காலை உணவை தவிர்க்கவே கூடாது என்பதுதான் மருத்துவர்களின் அறிவுரை. பரபரப்பான உலகில் பெரும்பாலோர் செய்யும் தவறு காலை உணவை டீ அல்லது காபியோடு முடித்துவிடுவது தான். இவை மட்டுமா இன்னும் கூட அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகள் அல்சரை வரவழைத்துவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அவை என்னென்ன என்பதை தெரிந்துகொண்டு அதை தவிர்த்தால் அல்சரை வரவிடாமல் தடுக்கலாம்.

நோயைத் தவிர்க்க இந்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். சத்துக்கு இந்த உணவை எடுத்து கொள் ளுங்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் இரைப்பை மற்றும் குடல் புண் உண்டாக காரணமே உணவு தான்.உணவை தேர்ந்தெடுத்தது சாப்பிடாததுதான் அல்சருக்கு முக்கிய காரணம் என்றாலும் மன அழுத்தம், மன பதட்டம், உரிய இடைவெளியில் உணவு உட்கொள்ளாதது, சுயமாக வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி எடுத்துகொள்வது, ஆரோக்கிய குறைபாடால் அதிகளவு எடுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகள், அமிலம் கலந்த காரம் அதிகமான உணவை எடுத்துகொள்வது போன்றவை எல்லாம் அல்சருக்கு காரணம் என்கிறார்கள் .மருத்துவர்கள்.

மன அழுத்தத்துக்கும் அல்சருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம் ஆனால் அதிகப்படியான மன அழுத்தம், அதீத கவலை உள்ளவர்களுக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் சுரப்பு அதிகரி க்கும். உடல் பருமன் பிரச்சனைகள், ஆரோக்கிய குறைபாடுகளால் அவதிப்படும்போது உண்டாகும் மன பாதிப்புகள் கூட இந்த அமிலத்தை சுரக்க செய்து வயிற்றில் புண்களை உண்டாக்கும்.

புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு இந்த புண் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அல்சர் வந்த பிறகு இந்த பழக்கம் தொடர்ந்தால் இது நோயை தீவிரமாக்கும். சில நேரங்களில் குடலில் எரிச்சலையும் வீக்கத்தையும் கூட உண்டாக்கிவிடும். இந்த பழக்கத்தால் வயிற்றில் சுரக்கும் அமிலம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகளான ஆஸ்பிரின்,ப்ரூஃபின் மாத்திரைகளும் கூட இந்த புண்களை உண்டாக்கும்.