நம்முடைய உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது இந்த பழம்

 
bp

பொதுவாக கோடை காலம் நம் உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்தி பல்வேறு நோய்களை உண்டாக்கும் .கோடை மட்டுமல்ல எந்த காலத்திலும் நம் உடலில் ஹீட் அதிகமானால் காய்ச்சல் ,வயிற்று போக்கு ,தலை வலி ,சளி ,உயர் இரத்த அழுத்தம் போன்ற தொல்லைகள் உண்டாகும் ,இது போன்ற நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் ,அதற்கு எந்த பழங்கள் உதவும் என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம் 
 
1.கோடை கால பழமான தர்பூசணி ஒரு சுவையான பழம்.அது  மட்டும் கிடையாது பல ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்க கூடியது  
2.இந்த ஆரோக்கியமான தர்பூசணியில்  நிறைய விட்டமின் சி, விட்டமின் ஏ, பொட்டாசியம், அமினோ அமிலங்கள்,நிறைந்து காணப்டுகின்றன  
3.இந்த ஆரோக்கியமான தர்பூசணியில் லைகோபீன், சோடியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆகியவை ஏராளமாய் காணப்படுகிறது. 
4.இந்த ஆரோக்கியமான தர்பூசணி நம்முடைய உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. 
5.மேலும் தர்பூசணி போன்றே கிவி பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. 
6.இந்த கிவி பழமும்  நம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. 
7.இதிலுள்ள நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் ஆகியவை செரிமானத்தை மேம்படுத்த உதவும் , 
8.மேலும் மருத்துவ குணமுள்ள கிவி பழம்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் , 
9.மருத்துவ குணமுள்ள கிவி பழம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன..