இதை ஊறவச்சி சாப்பிட்டா ,நம்மை இதய நோயிலிருந்து காக்க வச்சி வாழ வைக்கும்

 
heart

பெரும்பாலும் நம்மில் பலர் இரவு முழுவதும் பாதாம் பருப்பை ஊறவைத்து காலையில் சாப்பிடுவோம். ஏனென்றால் பாதாம் பல நன்மைகளைக் கொண்டிருப்பதால் அது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

ஆனால் நீங்கள் எப்போதாவது இதற்கு பதிலாக நீங்கள் வேர்க் கடலையை ஊறவைத்து சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆம்! வேர்க் கடலையை ஊற வைத்து சாப்பிடும் போது பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்..

நன்மைகள்:-

பொட்டாசியம், கால்சியம், மற்றும் செலினியம் போன்ற பண்புகள் நிறைந்த வேர்க்கடலையை ஊறவைப்பது சாப்பிடுவதால் அதன் நன்மைகளை இன்னும் கூட்டுகிறது. இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் மாரடைப்பு போன்ற பல இதய பிரச்சினைகளிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
ஈரமான வேர்க்கடலையை சாப்பிடுவது இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. வேர்க்கடலையை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது வாயு மற்றும் வயிற்றெறிச்சலை நீக்குகிறது.
குளிர்காலத்தில், இடுப்பு மற்றும் மூட்டு வலி நிறைய சிக்கல்களைத் தருகிறது. இந்த சூழலில் வேர்க்கடலை உங்களுக்கு உடனடி நிவாரணம் தரும். ஊறவைத்த வேர்க்கடலையை சிறிது வெல்லத்துடன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காலையில் ஈரமான வேர்க்கடலை உடன் மேலும் சில தானியங்களை உணவாக அளிப்பதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்துகிறது, அதில் உள்ள வைட்டமின்கள் கண்பார்வையையும் பிரகாசமாக்குகிறது.


ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்கிறது என்பது நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதை பற்றி பார்க்கலாம்.


 


​பிடித்த நொறுக்குத் தீனி

பச்சையாக உப்பு போட்டு சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம், உப்புமா போன்று புதுவிதமான உணவுகளை செய்து சாப்பிடலாம் இன்னும் வேர்க்கடலை வைத்து பலவிதமான உணவு வகைகளும் செய்து சாப்பிடலாம். இது நமது மூளையின் சத்தையும் அதிகரிக்கிறது. ஆனால் நீங்கள் ஊரவைத்த வேர்க்கடலையை சாப்பிட்டு உள்ளீர்களா? அப்படி இல்லை என்றால் நீங்கள் அதை முயற்சி செய்து பார்க்கலாம்.

​உடற்பயிற்சி செய்பவர்களுக்கு

உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைப்பவர்களும் பாடி பில்டிங்கில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களும் ஊறவைத்த வேர்க்கடலையை தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் முயற்சிக்கு பெரும் பலம் கிடைக்கும் என்று கூறுகின்றனர். வேர்க்கடலையில் மிகவும் அதிகமான புரோட்டீன்கள் நிறைந்து காணப்படுகிறது இவை பாடிபில்டிங் செய்பவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது என்று பலரும் கூறுகின்றனர்.

​ஜீரண சக்தியை அதிகரிக்க


மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது ஜீரண கோளாறு சரி செய்கிறது என்று நாம் அனைவரும் அறிந்ததே. வேர்க்கடலையில் மிகவும் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளது. இது ஜீரண சக்தியை சரி தெரிகிறது. அஜீரண கோளாறு மற்றும் அசிடிட்டி போன்ற அனைத்து உபாதைகளை சரி செய்கிறது.

​இருதய ஆரோக்கியத்திற்கு


இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த வேர்கடலையானது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது என்று கூறுகின்றனர். மாரடைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து இது நம்மை காக்கும் என்று கூறுகின்றனர். இதில் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்திருப்பதால் ரத்த ஓட்டம் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது. இதை கொஞ்சம் கொஞ்சமாக பல நாட்கள் உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

​கேன்சர் செல்களை அழிக்க

இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆனது உடலில் வளரும் கேன்சர் செல்களை அழிக்க முயற்சி செய்கிறது. உடலிலுள்ள பல செல்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும். அந்த பாதிப்பு உள்ளான செல்களை வேர்க்கடலையில் உள்ள சத்தானது அழித்து விடுகிறது. வேர்க்கடலையில் மிகவும் அதிகமாக இரும்புச்சத்து,கால்சியம் ,ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை கேன்சர் செல்களை மேலும் வளரவிடாமல் தடுக்கிறது மேலும் ஏற்கனவே இருக்கும் கேன்சர் செல்களை அழிக்க முயற்சி செய்கிறது.