உடல் எடையை குறைக்க இப்படி ஒரு வழியிருக்கா ?இவ்ளோ நாள் தெரியாம போச்சே ..

 
jeeraga water

 சீரக தண்ணீருக்கு நம் உடலின் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் உண்டு .காலையில் இந்த தண்ணீரை குடித்தால் தேவையற்ற கொழுப்பைகரைக்கலாம் .இரவில் குடித்தால் செரிமானம் சீக்கிரம் நடந்து ,உடலில் கழிவுகள் தங்காது ..சீரக தண்ணீருடன் பின்வரும் பொருட்களை கலந்து குடிக்கலாம் 

 இரவு முழுவதும் சீரகத்தை நீரில் ஊற வைத்து, அருந்துவதற்கு முன்பு ஒரு சிறு கரண்டி இலவங்க பட்டை தூளை சேர்த்துக்கொள்ளலாம். அந்த சுவையும் அலுத்துப்போனால் இஞ்சி பொடி சேர்க்கலாம்.

seeragam

அடுத்து  சீரக நீரில் எலுமிச்சை சாறு சேர்ப்பது கொழுப்பின் அளவை சீராக்க உதவும். எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. அதன் காரணமாக அதிக கலோரி செலவாகிறது. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாகவும் எலுமிச்சை சாறு கலந்த சீரக நீரை அருந்தி வந்தால் உடல் எடை குறைவதோடு ,நாள் முழுவதும் உற்சாகமாவும் இருக்கலாம் .

அடுத்து  சீரகம், வெந்தயம் இரண்டையும் நீரில் கொதிக்க வைத்து, அவற்றை வடிகட்டி பின்னர் மெதுவாக அருந்தலாம். இந்த நீர் உடலில் ஹார்மோன் அளவை சீராக வைக்க உதவுகிறது. செரிமான கோளாறுகளை குணப்படுத்தி, உடல் எடை பெருமளவு குறையும் வாய்ப்புள்ளது என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்