அதிகாலையில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிச்சா என்னாகும் தெரியுமா ?

 
water

பொதுவாக உடல் ஆரோக்கியத்துக்கு காலையில் முதல் வேலையாக தண்ணீர் குடிக்க பழக வேண்டும் ,அந்த தண்ணீர் வெது வெதுப்பான நீராக இருந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உண்டு .இந்த பழக்கம் கழிவுகளை வெளியேற்ற உதவும் .ஆனால் வயிற்றில் அல்சர் முதல் அசிடிட்டி பிரச்சினையுள்ளவர்கள் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .இந்த வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் பசியுணர்வு அதிகரிக்கும் ,கேஸ்ட்ரிக் பிரச்சினை தீரும் ,நாம் சாப்பிடும் அதிகப்படியான உணவால் எடை கூடாமல் பாதுகாக்கிறது மேலும் நம் சருமம் தெளிவாக இருக்க உதவுகிறது .

water

1.ஒரு டம்ளர் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீர் பருகினால் சுலபமாக காலையில் மலம் கழிக்க முடியும். அது மட்டும் அல்லாமல் உடம்பில் இருக்கும் கெட்ட கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

2.  காலையில் சூடாக டீ, காபி குடிக்கும் முன்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரை பருகுங்கள். -

 மலம் கழிக்கும் வரை காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

3.மலம் கழித்த பின்னர் காலை உணவை எடுத்துக் கொள்வது தான் முறையாகும். இப்படி முறை தவறி நாம் உணவு பழக்கத்தை கொண்டு வருவதால், நிறையவே பிரச்சனைகளை அனுபவிக்கிறோம்.