உணவில் வால் நட் சாப்பிடுவோருக்கு இரவில் என்ன நடக்கும் தெரியுமா ?

 
walnut

வால்நட்டில் அதிகமாக ஆன்டி ஆக்சிடென்ட் இருப்பதால் நமக்கு நிறைய நன்மைகளை கொடுக்கும் .இது இதய நோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது .இதிலிருக்கும் ஒமேகா -3மன சோர்வு முதல் மூளை சம்பந்தமான பிரச்சினைகளை தடுக்கிறது .செரிமான சக்தியை அதிகரித்து குடல் ஆரோக்கியத்தை இது பாதுகாக்கிறது ,மேலும் தலை முடி உதிர்வு பிரச்சினை இருப்போர் இதை எடுத்து கொண்டால் அந்த பிரச்சினையை போக்குகிறது ,மேலும் சருமத்தில் சுருக்கம் வருவதை தடுத்து ,உடல் எடை கூடுதல் பிரச்சினை யுள்ளோருக்கு எடை குறைய வழி செய்கின்றது

271,631 Walnut Stock Photos, Pictures & Royalty-Free Images ...

 வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றி ஒரு மனிதனை அறிவார்ந்த மனிதனாக உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது

இப்போதைய காலகட்டத்தில் பருவமடைந்த பெண்கள் அனைவரையும் அச்சுறுத்தும் நோயாக மார்பக புற்று நோய் இருக்கிறது. வால்நட்ஸ் பருப்புகளை அடிக்கடி உண்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தி வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடலை பல்வேறு வகையான நோய் தொற்றுகளிலிருந்து காத்து நம்மை பாதுகாக்கிறது

. சிலர் எப்போதும் தூக்கமின்மை பிரச்சினையால் அவதி படுகின்றனர் .அவர்கள் தினமும் இரவு உணவின் போது வால்நட்ஸ் பருப்புகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு இரவில் நன்கு உறக்கம் ஏற்படும். மன அழுத்தங்களும் குறைந்து அவர்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது .