வெறும் வயிற்றில் வெந்தயத்தை விழுங்கினால் என்னாகும் தெரியுமா ?

 
vendhyam

இந்த டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலானோர் லேட்டா தூங்குவதாலும் .அதிக ஜங் புட் சாப்பிடுவதாலும் உடல் உஷ்ணம் அதிகரித்து அதனால் பல நோய்களுக்கு ஆளாகி அவஸ்தை படுகின்றனர் .இப்படிப்பட்ட உடல் உஷ்னத்தை குறைக்க பல இயற்கையான வழிகள் உண்டு .இந்த உடல் சூடு உள்ளவர்கள் அதிகமாகி தண்ணீர் குடிக்க வேண்டும் ,மேலும் அடிக்கடி அரை வெப்ப நிலையில் உள்ள தண்ணீரில் குளிக்க வேண்டும் .சூடு தண்ணீரில் குளிப்பதால் இன்னும் உடல் சூடு அதிகமாகி அவஸ்த்தை படணும் ,அடிக்கடி தண்ணீரால் மணிக்கட்டு ,நெஞ்சு பகுதி ,கழுத்து போன்ற இடங்களை ஒத்தி எடுங்கள் .அடிக்கடி வசிக்கும் ரூமிலிருந்து காற்றாட வெளியே செல்லுங்கள் ,மேலும் சில குறிப்புகள் பின் வருமாறு

vendhayam

1.வெந்தயம்

உடல் உஷ்ணம் தணிக்க காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயம் விழுங்கி வந்தால் உடல் சூட்டை எளிதாக தணிக்கலாம்.

வெந்தயம் உடல் சூட்டை தணிப்பதுடன் மலசிக்கல் பிரச்சனையையும் தீர்த்து வைக்கிறது

2.தர்ப்பூசணி

உடல் சூட்டை தனிப்பதில் அதிக நீர்சத்துக்களை கொண்ட உணவுகளில் முதன்மையானது தர்ப்பூசணி. .

உடல் வறட்சியை போக்கவும் உடல் உஷ்ணத்தை போக்கவும் தர்ப்பூசணி அற்புதமான பழம் என்பதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்தது கொண்டு ஆரோக்கியம் பேணுங்கள்

3.முலாம் பழம்

உடல் சூட்டை குறைப்பதில் தர்பூசணிக்கு அடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கக்கூடிய பலம் முலாம் பழம் தான். இது அதிக குளிர்ச்சியான பழம் என்பதால் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்