பெல்ட் போட்டும் வெளியே வரும் தொப்பைக்கு 'குட் பை' கூற உதவும் மூலிகை சாறு

 
thoppai

தொப்பை, தொந்தி என்று சொல்லப்படும் இந்த வயிற்று கொழுப்பை ஆண்கள் மட்டுமே கொண்டிருந்த காலங்கள் உண்டு. ஆனால் இப்போது நண்டு சிண்டுகள் முதல் வயதானவர்கள், பெண்களை கூட விட்டுவைக்கவில்லை. இன்று இளவயதிலேயே அதிக எடையை கொண்டிருப்பவர்கள் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைத்தாலும் வயிறு தொப்பை மட்டும் குறையவில்லையே என்னும் வருத்தம் இருக்கும்.
தொப்பை தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எப்படியாவது அதைக் குறைத்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறவர்கள் அதிகாலை தூங்கி எழுந்ததும் 2-3 டம்ளர் முதல் 1 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதில் கொஞ்சம் எலும்பிச்சை ஜூஸ் அல்லது பட்டை பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தொப்பை வயிறு உடல் எடையை அதிகரித்துகாட்டுகிறது என்பதை காட்டிலும் இது ஆரோக்கிய குறைபாட்டையும் உண்டாக்கிவிடுகிறது. இதற்கு காரணம் இவற்றில் ஒன்றாக இருக்கலாம்.

உணவு முறையில் அதிகம் எண்ணெய் சேர்த்த உணவுகளை எடுத்துகொள்வதன் மூலம் அது உடல் தொப்பையை உண்டாக்கிவிட செய்யலாம். இது சிறுக சிறுக படிந்து வயிற்று தொப்பையை உண்டாக்கிவிடும்

தொப்பை என்பது பரம்பரையாக வருகிறது என்று பலரும் நினைத்து சமாதானம் ஆகிறார்கள், ஆனால் தொப்பைக்கும் பரம்பரைக்கும் சம்பந்தம் இல்லை. பரம்பரையாக உணவு முறையை ஒரே மாதிரி எடுத்துகொள்வதால் உதாரணத்துக்கு எண்ணெய் பண்டங்கள் அதிகம் சேர்ப்பதால் தொப்பை உருவாகலாம். அதனால் பரம்பரை வழியாக வராது.

 அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன.

ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

இருப்பினும் இது நிரந்த தீர்வினை தராது. அந்தவகையில் தற்போது தொப்பை பிரச்சினையை தீர்க்கும் ஒரு அற்புதமான வீட்டு வைத்தியத்தை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்

உலர் திராட்சை 100 கிராம்

துளசி இலை 100 கிராம்

எலுமிச்சை சாறு 5 மி.லி

தேன் 10 மி.லி

செய்முறை

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு உலர் திராட்சை மற்றும் துளசி இலை இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு நன்கு அரைக்க வேண்டும்.

அரைத்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.

மேலும் இதனுடன் 5 மி.லி எலுமிச்சை சாறு மற்றும் 10 மி.லி தேன் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.

இவ்வாறு உருவான மருத்துவ குணமிக்க இந்த சாறை தினந்தோறும் காலை வேளைகளில் குடித்து வந்தால் தொப்பை உள்ளவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.