"நாளை முதல் நான் சர்க்கரை நோயாளி இல்லை"ன்னு பெருமையா சொல்ல அருமையான வழி

 
sugar

உலகின் சர்க்கரை நோய் தலைநகராக மாறிவருகிறது இந்தியா என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும்சர்க்கரை நோய்வளையத்துக்குள் வந்துகொண்டிருப்பது அபாய மணி.

கணையத்தில் இருந்து இன்சுலின் சுரப்பதில் மந்தநிலை அல்லது ரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் சேரும்போது, சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்படுவது, அதிக தாகம், சோர்வு நிலை மற்றும் பசி உணர்வு, உடல் எடை குறைவது, கண் பார்வை மங்குவது, காயங்கள் ஆறுவதில் தாமதம் ஏற்படுதல், அடிக்கடி நோய்க் கிருமிகளின் தொற்று ஏற்படுதல், உள்ளங்கை மற்றும் பாதங்கள் மரத்துப்போதல் ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும்.

அதிக உடல் எடை, ரத்த அழுத்தம், உடற்பயிற்சியின்மை, ஊட்டச்சத்து இல்லாத உணவைச் சாப்பிடுதல், மனஅழுத்தம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது போன்ற பல காரணங்களால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

தடுக்கும் வழிகள்

சர்க்கரை நோய் வந்தபிறகு ஆயுளுக்கும் கவனமாக இருப்பதைவிட, முன்பே முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் அதிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை நோய் வராமல் தடுக்க சில ஆரோக்கியமான உணவு வகைகளை கட்டாயம் சேர்த்துக்கொள்வதுடன், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்.

ஆயுர்வேதத்தின்படி, சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் மூலிகைச் சிகிச்சையாக, தினமும் மஞ்சளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் சர்க்கரையின் அளவை எளிதில் குறைக்கலாம்.

மேலும் தினமும் வேப்ப இலையை அரைத்து, ஓர் உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால், அது இன்சுலின் சுரப்பை அதிகமாக்கி, சர்க்கரை நோயைக் குறைக்கும்.

பாலீஷ் செய்யப்பட்ட அரிசியும் கோதுமையும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல. கைக்குத்தல் அரிசி கிடைத்தால் மறுக்காமல் வாங்கி சாப்பிடுங்கள்.இவை லோகிளைசமிக் தன்மை கொண் டவை என்பதால் ரத்தத்தில் சர்க்கரையை சேர்க்காதவை. அதனால் தினை சரிசி, வரகரிசி, மாப் பிள்ளை சம்பா என்று மாற்றி மாற்றி பயன்படுத்துவதும் நல்லது. தவிர்க்க முடியாமல் அரிசி சோறு சாப்பிடுபவர்கள் அரிசி உணவுக்கு நிகராக காய்கறிகள், கீரைகள் கலந்து நன்றாக மென்று சாப்பிட்டால் அரிசி உணவு எதிரியல்ல.

ஆனால் உடல் உழைக்காமல் ஏஸி அறையில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அதிகமாக அரிசி உணவை எடுக்காமல் காய்கறிகள் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

​கீரைகள், காய்கறிகள்


பச்சை இலை கீரைகள் மற்றும் காய்கறிகளில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. இவற்றில் வைட்டமின் சி , தாதுக்கள் நிறைந்திருக் கின்றன. நீரிழிவு உயர் அழுத்தம் இருப்பவர்களுக்கு இந்நோயை கட்டுக்குள் வைக்க இவை உதவுகிறது.

கீரைகளில் பொட்டாசியம், வைட்டமின் ஏ கால்சியம் ஆகியவையும் புரதமும் சேர்ந்திருக்கிறது. அதிகளவு ஸ்டார்ச் ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருப்பதால் இவை நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.நீரிழிவால் கண்களுக்கு உண்டாகும் கண் புரை போன்ற பாதிப்பை தடுக்கவும் இவை உதவுகின்றன.பொதுவாகவே இவை நம் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன.

​உலர் பருப்புகள்

கொட்டை பருப்புகள் என்று அழைக்கப்படும் பருப்புகளில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. இவை இதயத்தைப் பாதுகாக்க கூடியவை. இதில் இருக்கும் ஒமேகா 3 என் னும் அமிலம் இதய ஆரோக்கியத்துக்கு முக்கியமானது. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு பாதிப்பு இருப்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான பாதிப்பும் பக்கவாதமும் உண்டாகும் வாய்ப்பு உண்டு. அதனால் இதயத்துக்கு பாதுகாப்பை தரும் கொழுப்பு அமிலங்களை உணவின் மூலம் பெறுவது அவசியமானது. ஆளி விதை, பூசணி விதை, எள் போன்றவையும் எடுத்துகொள்ளலாம்.

​சிட்ரஸ் பழங்கள்

பழங்களில் ஆப்பிள், ப்ளூபெர்ரி, கொயா பழங்களோடு சிட்ரஸ் இருக்கும் பழங்களும், இனிப்பு குறைவாகவும் துவர்ப்பு குறைவாகவும் இருக்கும் பழங்களை சாப்பிடுவது நல்லது.சிட்ரஸ் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை பழங்கள் ஆன் டி பயாடிக் குணங்களை கொண்டிருப்பவை. கார்போஹைட் ரேட் இல்லாமல் இவற்றின் மூலம் வைட்டமின் மற்றும் தாதுக்கள் எடுத்துகொள்ளலாம். ஆப்பிள் பழங்களை தோல் நீக்காமல் எடுத்துகொள்ள வேண்டும். இவை தவிர பழுப்பு நிறத்தில் உள்ள கொய்யா, நாவற்பழம், துவர்ப்பு நிறைந்த நாட்டு மாதுளை போன்றவையும் சர்க்கரை நோய்க்கு நல்லது.

​திரவ ஆகாரம்

காஃபி, டீ பானங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. க்ரீன் டீ குடிக்கலாம். பால் குடிக்காமல் பாலை மோராக்கி குடிக்கலாம். காய்கறிகள் கலந்த சூப் அதிலும் நிலத்துக்கடியில் விளைவும் உருளைக் கிழங் கும், கேரட், பீட்ருட் டும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது. இனிபு உருளைகிழங்கு எடுத்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


சீரகம், வெந்தயம் கொதிக்க வைத்த நீரை குடிக்கலாம். முருங்கைக்காம்புகளை வேகவைத்து மசித்து நீரை வடிகட்டி சூப் ஆக செய்து குடிக்கலாம். தினம் ஒரு தம்ளர் காய்கறி சூப் நல்லது. த்து மல்லி, புதினா சேர்த்த சூப்புகளும் அடக்கம். கசப்பை எடுத்துகொள்ள விரும்புவார்கள் பாகற் காயை சாறாக்கி குடிக்கலாம்