ஸ்ட்ராபெரி இலையை கஷாயம் வச்சி குடிச்சா எந்த நோயை வச்சி செய்யலாம் தெரியுமா ?

 
heart

ஸ்ட்ராபெரி பழங்களை சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவர் .இந்த பழங்கள் விலை அதிகம் என்றாலும் இதை சாப்பிடுவதால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு .இதில் பல விட்டமின்களும் ,பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.இது பற்களில் இருக்கும் கறையை நீக்கிவிடும் தன்மை உடையது.இது குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் ஸ்ட்ராபெரி  பழம் பேருதவி புரிகிறது.இது இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதை தடுக்கிறது,மேலும் இந்த பழம் எலும்பு முறிவுகள்,  தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!

1.ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.

2.ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட்டால் உடல் வெப்பம் நீங்கும்.

3.ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட்டால் இரத்தத்தை முழுமையாக சுத்தப்படுத்தும்

4.ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட்டால் தோல் தொடர்பான நோய்களினால் பாதிக்கப்படுவோர் நிவாரணம் கிடைக்கும்

5.பெண்கள் தங்கள் அழகுக்கு ஒளிரூட்ட ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிடுவது நல்லது. அந்த அளவுக்கு உடலுக்கு அழகை புதுப்பிக்கிறது

6.அதிக அளவில் வைட்டமின் சி உள்ள பழம் இதனால் ஸ்கர்வி நோய் தடுக்கப்படுகிறது.

7.ஸ்ட்ராபெரி இலையில் சிறுநீரை தூண்டுகிற சக்தி உள்ளது

8.இதன் இலையை கசாயமாக்கி அருந்த வேண்டும் இந்த கசாயம் அதிக இரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கு, சிறுநீரகங்கள், பித்தப்பை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள கேடுகளை நீக்கும்.