வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள்-அலட்சிய படுத்தினால் ஆபத்து

 
stomach

இன்று உலகையே அச்சுறுத்தி வரும் நோய்களில் முக்கியமான நோய் எதுவென்றால் அது கேன்சர்தான் .இந்த கேன்சர் நோய் உடலின் பல பாகங்களில் உருவாகும் ஒரு கொடிய நோய் .இந்த கேன்சருக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது புகை மற்றும் புகையிலை பழக்கமாகும் .அதனால் அந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது என்று பல டாக்டர்கள் கூறியும் அதை நிறைய பேர் கண்டுகொள்ளாமல் கேன்சர் தாக்கி அவதி படுகின்றனர் .இந்த கேன்சரில் வயிற்று புற்று நோயும் ஒன்று .இது நம் உடலில் பாதித்து வளர தொடங்கும் போது பொதுவான அறிகுறியே காமிக்கும் ,நோய் முற்றிய பிறகே அது வெளிப்படுத்தும் .இதன் முக்கிய அறிகுறிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

cancer

1.வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் சில நேரங்களில் மிகவும் தெளிவற்றதாக இருக்கிறது. 

2.ஆரம்பத்தில் அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி போன்ற பொதுவான சில அறிகுறிகள் வெளிப்படுவதால் மக்கள் இதனை அலட்சியப்படுத்துகின்றனர் . 

3.சில நேரங்களில் நோயாளிகளுக்கு குறைந்த அளவு ஹீமோகுளோபின், திடீர் எடை இழப்பு அல்லது பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும். அப்போதும் மக்கள் இதை அலட்சிய படுத்துகின்றனர்

4.வயிறு  புற்றுநோய் மிகப் பெரியதாக இருந்தாலும் அறிகுறிகள் நீண்ட நாட்களுக்கு பிறகே வெளிப்படுகிறது.