மருத்துவர்களின் பொற்காலமாக இருக்கும் இந்த மழைகாலத்தில் பேஷண்டாக மாறாமலிருக்க சில வழி

 
immunity

கனமழை வெளுத்து வாங்குகிறது. தெருக்கள் குளங்களாகிவிட்டன. கூடவே கழிவுநீரும் கலப்பதால் கொசுக்களும் கிருமிகளும் பெருகி, வைரஸ் காய்ச்சல்களும், வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் வரிசையாகப் படையெடுக்கத் தொடங்கிவிடும். ஏற்கெனவே டெங்கு வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஈரப்பதமான சூழல் மேலும் கிருமிகள் அதிவேகமாகப் பரவ ஏதுவாகிவிடும். விளைவு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள்.  


தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க, இதுபோன்ற பருவகாலங்களில் நம் முன்னோர் பல்வேறு வீட்டு வைத்தியங்களைச் செய்வார்கள்

குளிர்காலத்தில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய சோம்பேறித்தனமாக இருக்கும். ஆனால், குளிர்காலத்திலும் உடலை நன்றாக பராமரிக்க உடற்பயிற்சி செய்வது அவசியம்

கஷாயம்

ஆண்டின் வெவ்வேறு பருவங்கள் மனதுக்கும், உடலுக்கும், நமது மனநிலைக்கும் தனித்துவமான பலன்களைத் தருகின்றன. குளிர்காலத்தில் எழுந்திருப்பது மிகவும் கடினமாக இருக்கும். அதிலும் படுக்கையில் இருந்து எழவே மனமில்லாமல் போகும் குளிர் நாட்களில் உடற்பயிற்சி செய்வது சிரமமாக இருக்கும். இருப்பினும், உடல் எடையை குறைத்து, உடலை சிறப்பாக பராமரிக்க சில குறிப்புகள் உங்களுக்காக...

கோடையில் உடற்பயிற்சி செய்வதை விட குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் அதிக கலோரிகளை எரிக்க முடியும். குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்யும்போது வியர்வை குறைவாக வரும், எளிதில் சோர்வு ஏற்படாது.

 

நடைபயிற்சி: குளிரில் உடற்பயிற்சியை விறுவிறுப்பான நடையுடன் தொடங்கினால் நன்றாக இருக்கும். சற்று நேரம் ஜாகிங் செய்யலாம் இவை உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும் மற்றும் உங்கள் வரவிருக்கும் ஒர்க்அவுட் அமர்வுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உங்களை தயார்படுத்தும்.

ஜாகிங் அல்லது ஓட்டத்திற்குப் பிறகு நீங்கள் சில நிமிடங்களாவது, கை கால்களை நீட்டவும் அதேபோல உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் சில நிமிடங்களுக்கு கை கால்களை நீட்டுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர், இது உங்கள் தசைகளை வலுவாக்கும்.

சூரிய நமஸ்காரம்: சூரிய நமஸ்காரம் முழுமையான உடல் பயிற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே அதை தவறாமல் செய்யவும். சுவாசப் பயிற்சியான பிராணயாமம், மனம் மற்றும் உடல் ஆகிய இரண்டிற்கும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது. குளிர்காலத்தில் பிராணாயாமம் செய்வது, ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகளை குறைக்கும்.

சுக்கு - மல்லி கஷாயம்


தேவையானவை:

சுக்கு - 10 கிராம்,


மல்லி - 20 கிராம்,

சீரகம் - 5 கிராம்.


செய்முறை:

சுக்கு, மல்லி, சீரகத்துடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளராக வற்றும் அளவு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அதை ஆறவைத்தோ, மிதமான சூட்டிலோ பருகலாம். பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம். இந்தக் கஷாயத்தை உணவுக்குப் பின் காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்.


பலன்கள்:

மழைக்காலங்களில் வரும் செரிமானப் பிரச்னைகளை தீர்க்க உதவும். வயிறு மந்தமாவதைத் தடுக்கும்.