பெண்கள் கர்ப்பமாயிருப்பதை காமிக்கும் அறிகுறிகள்

 

ஒரு பெண் தன்னுடைய வாழ்வில் முக்கிய கட்டமாக உணர்வது அவர் கர்ப்பமாக இருக்கும் நாட்களைத்தான் .இந்த நாட்களில் அந்த பெண் ஒரு குழந்தையை சுமக்க அவரின் உடல் தயாராகிவிடும் .அதற்கு முதல் அறிகுறி அவருக்கு மாதவிடாய் தள்ளி போவது .அடுத்து அந்த நாட்களில் காலையில் குமட்டல் ,வாந்தி வருவது போன்ற அறிகுறி காணப்படும் .மேலும் காலையில் மயக்கம் ,வயிற்றில் நிறைய காற்று புகுந்து கொண்டு வயிறு உப்பிசமாய் இருக்கும் .அடுத்து பல கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும் .மேலும் சில பெண்களுக்கு அடிக்கடி பசி எடுக்கும் .அதனால் புளிப்பான உணவுகளை நாக்கு விரும்பும் .மேலும் சில அறிகுறிகளை பார்க்கலாம்

1.கப்பிணிகளின்  ஆரம்ப நாட்களில் மார்பகங்கள் அளவில் பெரியதாகவும் அதிக ரத்த ஓட்டத்தினால் தொடும்போதும் வலியும் மார்பக காம்புகளில் சிலிர்ப்பு போன்றவை ஏற்படலாம்.

2.கருத்தரித்திருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு  மலச்சிக்கல் ஏற்படும். நார்ச்சத்து நிறைந்த உணவு அதிக அளவில் எடுப்பது மற்றும் அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் மலச்சிக்கலை குறைக்கலாம்.

3. கர்ப்பிணிகளின் கர்ப்பப்பை வளர வளர அதிகமாக நெஞ்செரிச்சல் ஏற்படும். உணவுகளை இடைவெளி விட்டு சிறிது சிறிதாக உண்பதன் மூலமம்  மசாலா உணவுகளை குறைப்பதன் மூலம் இதை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம் .

4.கர்ப்பிணிகளின் இரவில் காலில் பின்புறத்தில் திடீர் சுருக்கம். உணர்வற்றது போன்ற உணர்ச்சி, சிலிர்ப்பு, தசை இறுக்கம் போன்றவை ஏற்படும்.

5.கருத்தரித்திருக்கும் போது  அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் சிறுநீரை அடக்க முடியாமல் தானாக சிறுநீர் ஒழுகுதலும் ஏற்படும்.

6.கருத்தரித்திருக்கும் போது  குழந்தை அசைதல், கால்களில் ஏற்படும் தசை இறுக்கம், சதைபிடிப்பு போன்றவை காரணமாக தூக்கம் தடைபடலாம்.