கம்ப்யுட்டரில் உக்காந்திருப்பவர்கள் முதுகு வலியில் சிக்காமலிருக்க பக்காவான வழிகள்

 
mudhuku

காய்ச்சலுக்கு நிகராக தற்போது பெரும்பாலான மக்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுக்க காரணம் முதுகுவலி தான் என்றும் சொல்லலாம். ஆபத்தான நோயல்ல ஆனால் வலி அவஸ்தையை உண்டாக்கும் நோய்.

நமது உடலில் முதுகில் இருக்கும் எலும்பில் மொத்தம் 33 விதமான எலும்புகள் உண்டு. இவைதான் நம்மை உட்காரவும், ஓடவும், நடக்கவும், படுக்கவும் வைகிறது.

முதுகு பகுதியின் மேல் முதுகுவலி, கீழ் முதுகு வலி என்று ஒவ்வொரு இடங்களிலும் குறிப்பிட்டு வருவதும் உண்டு. பொதுவான வலியும் உண்டு. காய்ச்சலுக்கு ஓய்வெடுத்தால் சரியாகும் என்று சொல்வார்கள். ஆனால் இந்த முதுகுவலி வரும் போது சும்மாவே உட்கார்ந்திருந்தாலும், வேலை செய்துகொண்டே இருந்தாலும் கூட வலியின் தீவிரம் இருந்துகொண்டே இருக்கும்.

​முதுகு வலிக்கு காரணம்


உடல்ரீதியிலான சில குறைபாடுகள் முதுவலிக்கு காரணமாக அமையும். ஆனால் இது வெகு சிலருக்கு மட்டுமே உருவாகும் என்றாலும் தெரிந்துகொள்வது நல்லது. முதுகு தண்டுவடத்தில் கிருமித்தொற்று, புற்றுநோய் போன்ற பிரச்சனைகளும் கூட முதுகுவலியை உண்டாக்கிவிடும்.

அடுத்து முதுகுப்பகுதி தண்டுவடம், எலும்பு, தசைநார் போன்ற பிரிவுகளை உள்ளடக்கியிருக்கிறது. இந்த பாகத்தில் பாதிப்பு உண்டாகும் போது வலி உண்டாகும். தசைக்கு அதிகப்படியான வேலை கொடுக்கும் போது, தசை பிடிப்பு பிரச்சனை உள்ளாகும் போதும் முதுகு வலி பிரச்சனை உள்ளாகக்கூடும்.

முதுகு தண்டு வட பகுதியில் இருக்கும் எலும்புகளுக்கு இடையில் ஏதேனும் குறைபாடு, கால்களின் பின்புறம் உண்டாகும் அதிகப்படியான வலி, மூட்டுவலியின் தீவிரம், எலும்பு தேய்மானம், முதுகு தண்டு வளைவு போன்றவையும் கூட முதுகுவலிக்கான காரணங்களே. இவையெல்லாம் தாண்டி ஒரு காரணம் உண்டு. அவைதான் பெரும்பாலானவர்களுன் முதுகுவலிக்கு காரணம்.இன்று பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் இளைய தலைமுறையினர் 80 % பேர் இந்த முதுகுவலி பிரச் சனையை சந்தித்துவருகிறார்கள். மீண்டும் வலியுறுத்துவது இதைத்தான் இந்த முதுவலி ஆபத்தி ல்லை ஆனால் பணி செய்ய இயலாமல் ஒருவித அவஸ்தையை உண்டு செய்யும்

முதுகுவலி என்பது சுமார் 40 வயதை தாண்டியவுடன் பெரும்பாலானோர்களுக்கு வரும் நோயாக உள்ளது. முதுகுவலி உள்ளவர்கள் கீழ்க்கண்டவற்றை செய்யமால் இருந்தால் வலியில் இருந்து தப்பிக்கலாம்

1. இருசக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையில் நேராக முதுகு வளையாமல் உட்கார்ந்து நேராக பார்வை இருக்கும்படி ஓட்டவேண்டும்.

2. படுக்கையில் படுக்கும்போது கனமான தலையணைகளை பயன்படுத்தாமல், மென்மையான தலையணைகளை பயன்படுத்துங்கள்.

3. தினமும் 25 நிமிடங்கள் வேகமாக நடப்பது அவசியம். 70 நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் தொடர்ந்து உட்கார வேண்டாம்

4. உட்கார்ந்து வேலை செய்பவர்கள் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை இருக்கையைவிட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்க வேண்டும் பின்னர் மீண்டும் வேலையை தொடங்கலாம்.

5. தினமும் 21 முறையாவது குனிந்து பாதத்தைத் தொட்டுவிட்டு நிமிருங்கள். அதிக பாரமான பொருட்களைத் தூக்கும்போது, குனிந்து தூக்காதீர்கள். தினமும் காலை, மாலை 20 முறையாவது கைகளை வானத்தை நோக்கி நீட்டி, இறக்குங்கள். இவற்றை அன்றாடப் பழக்கமாக்கிக் கொண்டாலே முதுகுவலியில் இருந்து எளிதாக விடுபடலாம்