உங்கள் கல்லீரல் கண்டமாயிருச்சின்னு காமிக்கும் அறிகுறிகள்

 
liver

நம் உடலுக்கு முக்கியமான உறுப்புக்களில் கிட்னி .இதயம் போலவே கல்லீரலும் முக்கியமானது .

அந்த கல்லீரலை பாதுகாக்க மது பழக்கத்தை அவசியம் தவிர்த்து ,மேலும் சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகளை மூன்று வேளைகளும் சாப்பிடுவது நல்லது.

Liver

உங்கள் கல்லீரல் அபாயகரத்தை தொட்டுள்ளது என்பதை இந்த அறிகுறிதான் உறுதி செய்கிறது. கை மற்றும் கால்களின் பாதங்களில் சிவப்பாக இருந்தால் கல்லீரலில் பெரிய பிரச்சசினையுள்ளது அதனால் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான அபாய மணிதான் இந்த அறிகுறி

உடலின் இன்றியமையாத உறுப்பான கல்லீரல் பாதிப்புகளை உங்களின் நிறமே காட்டி கொடுத்து விடும். கண்களோ அல்லது தோலோ மஞ்சளாக இருந்தால் அது கல்லீரல் பிரச்சினைக்கான அபாய மணி

கல்லீரலில் பிரச்சினை யுள்ளோரின் கண்கள் அதிக வறட்சியாகவோ அல்லது வாய் வறட்சியாகவோ இருக்கும் . . கண்ணில் இது போன்ற பாதிப்புகள் இருந்தால் அதற்கு கல்லீரல் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணமாகும். இதுவே நீண்ட நாட்கள் இருந்தால் அதிக பாதிப்பு உள்ளது  உணர்ந்து கொண்டு தக்க சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்

மது பழக்கத்தால் உண்டாகும் கல்லீரல் நோயானது ,வறண்ட தொண்டை, பசியின்மை, மஞ்சள் காமாலை, வாந்தி போன்றவை ஆரம்ப  அறிகுறிகள் ஆகும். இதன் பிறகு கல்லீரல் வீக்கத்தால் அடிவயிற்றில் வலி உண்டாகி ,கவனிக்காமல் விட்டால் ஈரல் மாற்று சிகிச்சை வரை சென்று பெரும் பாதிப்புகளை கொடுத்து விடும் உஷார் மக்களே உஷார்