கிட்னியை நூறாண்டு பாதுகாக்க கிளீன் பண்ணும் வழிகள்

 
kidneys

மனித உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் முதன்மையான உறுப்பு இரண்டு  கிட்னி .இதன் பணி உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவது .

சிறுநீரகத்தில் கற்கள் உருவாக முக்கிய காரணம் தேவையற்ற உப்பு கிட்னியில் தங்குவதுதான் .மேலும் கிட்னியின்  வேலை ரத்தத்தில் கலந்திருக்கும் தேவையற்ற உப்புகளை நீக்கி அந்த உப்பை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியே அனுப்புவதுதான் . ஆனால்  கோடையில் வியர்வை வழியாக கழிவுகள் வெளியேறுவதால் கிட்னியில் தங்கும் உப்புக்கள் கற்களாக உரு மாறுகிறது 

kidney

கிட்னியை க்ளீன்  செய்யும் வழி 

 தினமும் ஒரு டம்ளர்  வெந்நீரில், அரை எலுமிச்சைப்பழத்தை சாறு எடுத்து கலந்து பருகிவந்தால், கிட்னியின்   ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் . ஏனெனில் எலுமிச்சம் பழத்தில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிட்னியில் கல் சேர விடாமலே தடுக்கும் .அது மட்டுமல்லமல்லாமல் , திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி, ஆப்பிள் சிறுநீரகத்துக்கு காப்பாற்றும் பவர் உள்ள பழங்கள் ஆகும் . மேலும் நாம் தினசரி உண்ணும் உணவில், இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்த்துக்கொள்வது சிறுநீரகத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் 

அசைவம் உணவுகளில்  மாடு மற்றும் ஆட்டு இறைச்சியை அதிகப்படியாக உட்கொள்பவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாக வாய்ப்பு அதிகம். அதிலும் ரெட் மீட் எடுப்போருக்கு இந்த பாதிப்பு அதிகம் .எனவே, இத்தகைய ரெட் மீட் இறைச்சி உட்கொள்வதை தவிர்த்தல் கிட்னிக்கு நன்மை பயக்கும் 

 குளிர்பானங்கள் அதிகம் எடுப்பது ,  சிறுநீரகத்தைப் பாதிக்கிறது. ஏனெனில் அதில் செயற்கை சுவையூட்டிகள், பதப்படுத்தும் பொருட்கள், சர்க்கரை போன்றவை இருப்பதால் அது கிட்னியை பாதிக்கும் . எனவே கூல்ட்ரிங்ஸ்க்கு பதில் பழ ஜூஸ் குடிக்கலாம்