ஒற்றை தலைவலி நேரத்தில் திராட்சை சாப்பிட்டா என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா ?

 
head ache

பொதுவாக திராட்சை பழங்களில் கருப்பு திராட்சை ,பச்சை திராட்சை ,பன்னீர் திராட்சை ,ஆங்கூர் திராட்சை ,விதையில்லா திராட்சை என்று பல வகையான திராட்சை பழங்கள் உள்ளது .இதில் விட்டமின் டி ,சர்க்கரை ,மாவு சத்து அதிகமாக நிரம்பியுள்ளது .இதில் உள்ள விட்டமின் கே சத்துக்கள் நம் பற்களுக்கும் ,எலும்புகளுக்கும் அதிக நன்மைகளை வழங்க கூடியது .இன்று மல சிக்கல் பிரச்சினையால் பலர் அவதி பட்டு வருகின்றனர் .இந்த பிரச்சினையை எளிதாக திராட்சை பழம் மூலம் தீர்த்து விடலாம் எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த பழம் அடிபட்டால் வரும் ரத்தம் உறைதலுக்கு உதவுகிறது

grapes

 

ஒருவரது  உடலில் தினம் தினம் கழிவுகள் தேங்கும் .இப்படி தேங்கி இருக்கும் கழிவுகளை சிறுநீரில் வெளிவேற்றும் செயல்களை சிறுநீரகங்கள் செய்து வருகின்றன. அதனால் இந்த பணியை சீராக செய்ய ஒருவரின் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியமாகும். தினமும் சில திராட்சைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்து ,அந்த கழிவுகளை வெளியேற்றும்  மேலும் கிட்னியிலும் ,சிறுநீர் பாதையிலும் சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்கும்.

ஒருவருக்கு அடிக்கடி வரும் தலைவலி அனைவரையுமே மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் ஒரு பாதிப்பாகும். அதிலும் ஒருவருக்கு ஒற்றை தலைவலி ஏற்படும் போது தலையில் ஏற்படும் வலி சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தை கொடுக்கும் . இந்த ஒற்றை தலைவலி பிரச்சனை ஏற்படும் சமயம் சில திராட்சை பழங்களை நன்கு மென்று சாப்பிட ஒற்றை தலைவலி பஞ்சாய் பறந்து போய் விடும்