இந்த காய்ச்சல் சீசனில் காசு செலவில்லாமல் காய்ச்சலை விரட்டும் முரட்டு வழிகள்

 
fever

குளிர் துவங்கிவிட்டது. வரிசையாக காய்ச்சல், இருமல் என்று லேசாக ஆரம்பிக்கும் போதே சுதாரித்து விடுங்கள்.இல்லையெனில் அது உங்களுக்கும் பெரும் செலவை இழுத்து வைக்கும்.

குழந்தைகளிடத்தில் பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் அத்துடன் இது வேகமாக பரவும் கிருமி என்பதால் பள்ளி செல்லும் குழந்தைகள் இருப்பவர்கள் அதிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

அப்படி ஆரம்ப நிலையில் இருக்கும் போதே அதனைப் போக்க எளிய மருந்து ஒன்று இருக்கிறது அதனை நீங்கள் எளிதாக வீட்டிலேயே கூட தயாரித்துக் குடிக்கலாம். இது சளியை மட்டும் போக்குவதுடன் நின்றுவிடுவதில்லை. இன்னபிற ஏராளமான மருத்துவ நன்மைகளையும் நமக்குச் செய்கிறது.

மிளகுப் பால் :
பால் பற்றி நமக்கு ஏற்கனவே தெரியும். அதே போல மிளகிலும் ஏராளமான மருத்துவ நன்மைகள் அடங்கியிருக்கிறது.

இதில், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் உள்ளன, இவை நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு ஆகியவற்றை அகற்றி, நரம்புகளுக்கு ஊக்கமளிக்கிறது.

உமிழ்நீர் அதிகம் சுரக்கவும், உணவும் நன்கு செரிக்கவும், ஜீரணக் கோளாறுகள் உடனே குணமாகவும் மிளகு பயன்படும்

இது மிகவும் எளிதானது. பாலை லேசாக சூடாக்கி அதில் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு இனிப்புச் சேர்த்துக் குடிக்கலாம். வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்க்கலாம்.

இது குடிப்பதனால் உடனடியாக சளி குறையும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இல்லை

  ஜலதோஷம் போக்கும் :

 இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் ரொட்டி சாப்பிடுவது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் பிரச்சினை போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதால் பிரெட் உடன் பழங்கள், பழச்சாறு போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். வாழைப்பழம், ஆரஞ்சு, பேரீச்சம்பழம் போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஃப்ரெட் உடன் பழங்களை எடுத்துக் கொள்ளும்போது மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் இருக்கும்.

காய்ச்சல் இருந்தபோதிலும் மெல்ல இதமாக இருக்கும் கோதுமை ரொட்டி போன்றவற்றை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடலாம். கோதுமையில் நார்ச்சத்து உள்ளது என்பதால் காய்ச்சல் காலங்களில் மலச்சிக்கல் பிரச்சினையைத் தடுக்க உதவும். ஆனால் ரொட்டி சாப்பிடும்போது எண்ணெய் இல்லாமல் தயார் செய்து சாப்பிடலாம்.

 

கோதுமை ரொட்டியில் வைட்டமின் A, அயோடின், பொட்டாசியம், கால்சியம் மற்றும் தாதுக்கள் நிறைந்து இருப்பதால் அதை காய்ச்சல் சமயத்தில் எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் எடுத்துக்கொள்ளலாம்.

வறுத்த அரிசி கஞ்சி என்பது பழங்காலத்திலிருந்தே காய்ச்சலுக்கான சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசியை ரவை போல உடைத்து, தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து, உப்பு சேர்த்துக் குடிக்கலாம். இது காய்ச்சல் சமயத்தில் உடலுக்கு ஆற்றல் கொடுக்க மிகவும் நல்லது.

 

நார்ச்சத்து நிறைந்த இந்த அரிசி கஞ்சியில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. காய்ச்சலின் போது சோர்வு மற்றும் நீரிழப்பை போக்குகிறது. உடலில் உள்ள கிருமிகளைக் கொல்லும் சக்தி அரிசி கஞ்சிக்கு உண்டு. வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலால் ஏற்படும் வாந்தி பிரச்சினைகள் இருந்தபோதிலும், அரிசி கஞ்சியை மிதமான வெப்பத்துடன் எடுத்துக் கொள்ளும்போது இவை உடலின் வலிமையை அதிகரிக்கும். கூடுதலாக, அவ்வப்போது கஞ்சி எடுத்துக்கொள்வதன் மூலம், இழந்த ஊட்டச்சத்துக்களை உடல் விரைவாக மீட்டெடுக்க முடியும்.

கேரட், பீட்ரூட், பீன்ஸ் ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொதிக்க வைத்து மிளகு, சாம்பார் வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து சூப் ஆக குடித்து வர உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் அது படிப்படியாக கட்டுப்பாட்டுக்கு வரும். தினமும் இரண்டு கப் சூப் குடிப்பதால் காய்ச்சல் விரைவாக குணமாகும்.

சூப்பில் சேர்க்கப்படும் மிளகு ஒரு அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டிருப்பதால் செயல்படுகிறது. தொண்டையில் இருந்து சளியைக் கரைத்து வெளியேற்றும். உடலுக்கு வலிமை சேர்க்கும். காய்ச்சல் சமயத்தில் நீங்கள் காரமான உணவை சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், காய்ச்சலின் போது காரம் சேர்க்கக்கூடாது.

அது மட்டுமல்லாமல் வழக்கமான காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்து ஆரோக்கியமான கொத்தமல்லி டீ, சுக்கு காபி, செம்பருத்தி காபி, சீராக தேநீர் போன்ற இயற்கை பானங்களைக் குடித்தால் உடல் காய்ச்சலில் இருந்து குணமடைய மிகவும் உதவியாக இருக்கும்.