மீனும் ,முட்டையும் சாப்பிடுவோர் உடலில் எந்த பார்ட் பஞ்சராகாது தெரியுமா ?

 
egg

பொதுவாக அசைவ உணவுகளில் மட்டன் ,சிக்கனை விட அதிக ஆரோக்கியமான உணவு எதுவென்றால் அது மீன்தான் ,மீனில் அளவுகடந்த ப்ரோட்டினும் ,வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் பலவிதமான வைட்டமினும் அடங்கியுள்ளது .இந்த மீனை அதிகம் சேர்த்து கொண்டால் ஆஸ்துமா நோய் வராது .மேலும் இதய நோய் முதல் எலும்பின் ஆரோக்கியம் வரை காக்கும் இந்த மீன் ,அது போல் முட்டையும் நம் உடலுக்கு ஏரளமான புரதத்தை அள்ளி கொடுக்கிறது .இந்த முட்டை உடல் சோர்வு முதல் மன சோர்வு வரை குணப்படுத்தும்

Meat and Fish

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீன்களில் நிரம்பியுள்ளன. இது உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடியதாகும்.  கண்களில் வறட்சித் தன்மை வராமல் பாதுகாத்துக் கொள்ளவும், அதுமட்டுமின்றி கண்புரை நோய் நம்மை நெருங்காமல் காத்துக் கொள்ளவும் மீன்களில் உள்ள இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நமக்கு உதவுகிறது.  மீன்களை சாப்பிடுவதில் விருப்பம் இல்லாதவர்கள் மீன் எண்ணெய் பயன்படுத்த முயற்சி செய்யலாம்.

முட்டையில் நமது கண்களுக்குத் தேவையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே உங்கள் கண்களின் பார்வை திறனை அதிகரிக்க முட்டையை உணவோடு சேர்த்து அவ்வப்போது சாப்பிடுவது மிகச்சிறந்த ஒன்றாகும்.