வந்த பின் நொந்து போக செய்யும் ஜலதோஷத்தை வரும் முன் காக்கும் வழிகள்

 
cold

தற்போது குளிர்ச்சியான காலநிலை என்பதால் பலரும் இருமல் மற்றும் சளி தொல்லையால் பெரிதும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அதிலும் கொரோனா வைரஸ் வேகமாக மக்களிடையே பரவிக் கொண்டிருப்பதால், சாதாரண இருமல், சளி பிரச்சனைக்கு மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சரிசெய்ய முயற்சிப்பது தான் புத்திசாலித்தனம். முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் சளி, இருமல் பிரச்சனைக்கு மருத்துவமனைக்கா சென்றார்கள்? கை வைத்தியங்கள் மூலமாகத் தானே சரிசெய்து கொண்டார்கள்.. ஆனால், ஜலதோஷத்தை வரும்முன் தவிர்க்கலாம். சரி, சளி ஏன் உருவாகிறது, தவிர்ப்பது எப்படி? உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறையும்போது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகமாகும்; அதனால் சளித்தொல்லை உண்டாகும். எனவே, நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்து சளித் தொந்தரவில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று பார்ப்போம்.

நன்கு பழுத்த கொய்யாப்பழத்தை துண்டுகளாக்கி, மிளகுத் தூள் தொட்டு சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடும் போது, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

cold

தண்ணீர்குடிக்கலாம், மேலும் குடிக்கலாம்!

நம் நோய் எதிர்ப்புசக்தி தண்ணீரைத்தான் சார்ந்திருக்கிறது. நம் உடலில் இருக்கும் நீர்தான் ஊட்டச்சத்துகளை செல்களுக்குக் கொண்டு செல்கிறது; செல்களில் இருந்து நச்சுப்பொருள்களை அகற்றுகிறது; நம் உடல் வெப்பத்தைச் சீராக வைத்திருக்கிறது; மூட்டு இணைப்புகளைப் பாதுகாக்கிறது; வாய் உலர்ந்து போகாமல் பார்த்துக்கொள்கிறது. அதிகமான அளவில் தண்ணீர் குடித்தால், அது பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் விரட்ட உதவும். நிறைய தண்ணீர் குடிப்பது, நோய் எதிர்ப்புசக்தியைக் கொடுத்து, ஜலதோஷத்தை அண்டவிடாமல் காக்கும்.

சிரிப்பு டானிக்!

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும்என்பார்கள். இதைத்தான் பல ஆய்வுகளும் சொல்கின்றன. சிரிப்பு, நம் ஆற்றலைத் தூண்டும்; மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களைக் குறைக்கும்; நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்; வலியைப் போக்கும். அதிகப்படியான மன அழுத்தம் உடலின் எதிர்ப்புசக்தியைப் பாதிக்கும். சிரிக்கும்போதுஎண்டோர்பின்’ (Endorphins) என்ற ஹார்மோன் சுரந்து மனதை ரிலாக்ஸாக்கும்; மகிழ்ச்சியைத் தரும்.

தூக்கம் நல்லது!

குறைவான தூக்கம் நோய் எதிர்ப்புசக்தியைப் பாதிக்கும். ஆழ்ந்த தூக்கம்தான் தசைகளுக்கும் நரம்புகளுக்கும் ஓய்வளிக்கும். நிம்மதியான உறக்கம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்!

பூசணி விதை, சூரியகாந்தி விதைகள் போன்ற மக்னீசியம் அதிகமுள்ள உணவுகளும் மீன், பச்சைக் காய்கறிகளும் உடலின் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க உதவுபவை. அதேபோல, `எதிர்ப்புசக்தி பூஸ்டர்எனப்படும் வெள்ளைப்பூண்டு; இரும்புச்சத்துக்குப் பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள்; வைட்டமின் பி12 சத்துக்கு மீன் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். பப்பாளி, கிவி, மிளகு, புரோக்கோலி, முளைகட்டிய பயறுகளைத் தினமும் சாப்பிடலாம். இவையெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உத்தரவாதம் தருபவை.

உடற்பயிற்சி உதவும்!

`வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கு எப்போதாவது உடற்பயிற்சி செய்கிறவர்களைவிட 25 சதவிகிதம் ஜலதோஷம் பிடிக்கும் வாய்ப்புக் குறைவுஎன்கின்றன சில ஆய்வுகள். உடற்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் சீராகும். இதனால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது, வைரஸ் மற்றும் கிருமித்தொற்றுகள் ஏற்படாமல் காக்கும்.