இந்த பழம் சாப்பிடுவோருக்கு உடலின் எந்த பகுதியிலும் எலும்பு முறிவு ஏற்படாது

 
plums

உலகில் ப்ளம்ஸ்  பழங்களில் 2000 வகைகள் இருக்கின்றன .பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த ப்ளம்ஸ் பழம் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் கொடுக்க கூடியது .இந்த பழங்கள் நம் உடலில் ரத்த அழுத்தத்தை அதிகமாகாமல் காக்கும் .ப்ளம்ஸில் அடங்கியுல்ல தாமிரம் மற்றும் போரான் சத்துக்கள் நம் எலும்புகள் தேயாமல் காக்கும் ஆற்றல் கொண்டது .மேலும் இது சிறந்த ஆன்டி ஆக்சிடெண்ட்டாக செயல்பட்டு நம் உடலில் ஆக்சிஜன் குறையாமல் காக்கும் .மேலும் நம் உடலில் அமில தன்மை உண்டாகாமல் பாதுகாக்கும் .மேலும் ப்ளம்ஸ் பழம் நம் இதய பகுதி மற்றும் மூளை பகுதியில் ரத்தம் உறையாமல் பாதுகாக்கும் .

Plums Pictures | Download Free Images on Unsplash

சமீபத்தில் நடந்து முடிந்த ஆய்வில்,  தினசரி 5 முதல் 6 பிளம்ஸ் பழங்களை சாப்பிட்டால் எலும்புகள் வலுப்பெறும் என்றும் கூறப்படுகிறது.

உலர் பிளம்ஸ் பழத்தில் வீக்கத்தை குறைக்கும் கூறுகள் இருக்கிறது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

50 வயதை கடந்த பெண்களுக்கு , மாதவிடாய் நின்ற பிறகு அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ், இதய நோய், பக்கவாதம் மற்றும் மார்பகப் புற்று நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.  இந்நிலையில் தினமும் 5 முதல் 6 உலர் பிளம்ஸ் சாப்பிட்டவர்களுக்கு இந்த நோய்கள்  ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.