ஆண்கள் அதிகம் பீர் குடிச்சா ,அப்புறம் எந்த ட்ரீட்மென்டுக்கு மருந்து குடிக்கணும் தெரியுமா?

 
perikkai for health tips

பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம்இது பியர் எனவும் அழைக்கப்படுகிறதுபார்லி, கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாவுப் பொருளை நொதிக்க வைப்பதன் மூலம் பீர் தயாரிக்கப்படுகிறது.

beer

 

பீர் உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாது என்பது பெரும்பாலான மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்தியாவில் சுமார் 30% மக்கள் பீர் சாப்பிடுகிறார்கள். பெரும்பாலான மக்கள் பிற மது பானங்களை விட பீர் அருந்துவதை அதிகம் விரும்புவார்கள். ஏனெனில் விஸ்கி அல்லது ரம் உள்ளதை விட பீர் பானத்தில் ஆல்கஹால் அளவு குறைவாக உள்ளது. பீரில் (Beer) 5 முதல் 12 சதவிகிதம் என்ற அளவில் ஆல்கஹால் இருப்பதால் மற்ற ஆல்கஹால் பானங்களை ஒப்பிடும்போது இதனால் ஏற்படும் விளைவுகள் குறைவு தான். இருப்பினும், அளவிற்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப, நாள்தோறும் பீர் குடிப்பவர்களுக்கு பலவேறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

- சமீபத்திய ஆய்வில் பீர் அதிகமாக உட்கொள்வது ஆண்களின் பாலியல் ஹார்மோன்களை பாதிக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் படிமிக அதிகமாக பீர் அருந்தும் ஆண்களுக்கு, தந்தையாகும் வாய்ப்பு 50 சதவீதம் குறைக்கிறது என கூறப்படுகிறது.

- தொடர்ந்து பீர் குடிப்பதால் மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன. நீங்கள் உங்கள் மனதை எதிலும் ஒருமுகப்படுத்த முடியாத நிலை ஏற்படும். உங்கள் சிந்திக்கும் சக்தி குறைந்துவிட்டது.

- பீர்  அதிகம் குடிப்பதால் கல்லீரல் பிரச்சனை ஏற்படலாம். பீர் உள்ள ஆல்கஹால் கல்லீரலை சேதப்படுத்துவதே இதற்குக் காரணம். அதனால் உங்கள் செரிமான அமைப்பு முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

- பீரில் குறைவான ஆல்கஹால் இருந்தாலும், அதிகப்படியான கலோரிகள் இருக்கின்றன. உணவுகளில் உள்ள கலோரிகளுக்கும், ஆல்கஹாலில் உள்ள கலோரிகளுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. ஆல்கஹாலில் இருக்கும் கலோரிகள் அடிவயிற்றில் தங்கிதொப்பையை ஏற்படுத்துகின்றன என்பதால், அதிக கவனம் தேவை.

- ஆல்கஹாலை வளர்சிதை மாற்றம் அடைய செய்ய கூடுதல் வைட்டமின் பி தேவைப்படுவதால், தினமும் பீர் அருந்துபவர்கள் உடலில் வைட்டமின் மற்றும் தாதுபொருட்கள் பற்றாக்குறை ஏற்படும். அதனை கண்டறிந்து உடலுக்கு தேவையான வைட்டமின்களை எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.