தைராய்டு உள்ளவர்கள் உயிரோடு இருக்க உதவும் உணவுகள் .

 
thyroid

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.

தைராய்டு அறிகுறிகள்  மற்றும் தீர்வுகள்

இது தைராய்டு சுரப்பி போதுமான அளவு தைராய்டு ஹார்மோன்களை சுரக்காமல் இருக்கும் நிலை.

அறிகுறிகள் : உடல் இயக்கம் அனைத்தும் மெதுவாக செயல்படுவதால், அதிக குளிர் உணர்வது, எளிதில் சோர்வடைவது, சருமம் உலர்வது, எடை கூடுதல், மறதி மற்றும் மனச்சோர்வு அதிகரிப்பது, மாதவிடாய் பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல் ஆகியவை.

காரணங்கள்: உடலில் அல்லது தைராய்டில் ஏற்படும் ஆட்டோ இம்யூன் வியாதிகள், தைராய்டு அறுவை சிகிச்சை, கழுத்துப் பகுதியில் கொடுக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை, பிறக்கும் போதே தைராய்டு பிரச்சினைகளுடன் பிறப்பது, தைராய்டில் எரிவு (inflammation), குறிப்பிட்ட சில மருந்துகள், மிக அதிக அல்லது மிகவும் குறைவான அயோடின் மற்றும் தைராய்டை கட்டுப்படுத்தும் மூளையிலுள்ள பிட்யூடரி சுரப்பியில் நோய், மற்றும் குடும்பத்தில் தைராய்டு நோய் இருப்பது.

சிகிச்சை: மருந்துகள் மூலம் இந்த ஹார்மோன் அளவை சரிசெய்ய முடியும். மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இந்த மருந்தை தேவையைவிட குறைவாக எடுத்துக்கொண்டால் உங்கள் அறிகுறிகள் முழுவதும் குணமடையாமல் இருக்கும். அதிகமாக எடுத்துக்கொண்டால் தூக்கமின்மை, எடை குறைவு, பதட்டம், அதிக பசி, படபடப்பு, சோர்வு, மூச்சுவாங்குதல் போன்றவை ஏற்படும். அதனால் சரியான அளவு எடுத்துக் கொள்வதில் கவனம் தேவை. மருத்துவர் உங்களுக்கு மருந்து ஆரம்பித்து 6 - 10 வாரங்கள் கழித்து, மருந்தின் அளவை நிர்ணயம் செய்ய, இரத்தப் பரிசோதனை செய்வார். இதன் பின்பு வருடம் ஒரு தடவை இரத்தப் பரிசோதனை செய்யலாம்.
 தைராய்டு அறிகுறிகள்

உங்கள் அறிகுறிகள் மோசமடைந்தாலோ, மேற்கூறிய பிற அறிகுறிகள் ஏற்பட்டாலோ, பிற மருந்துகள் சாப்பிட ஆரம்பித்தாலோ, சரிவர மருந்துகள் எடுக்கவில்லை என்றாலோ, மருந்துகள் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றாலோ, கர்ப்பம் தரித்தாலோ மருத்துவரை அணுகி தைராய்டு ஹார்மோனின் அளவை பரிசோதிப்பது அவசியம்.

thyroid test, thyroid symptoms in tamil, தைராய்டு அறிகுறிகள்

முக்கியமான `மூன்று’!

மூன்று முக்கிய விஷயங்கள்தான் தைராய்டுக்கு அவசியமானவை.

* வேளாவேளைக்கு உட்கொள்ளும் மருந்துகள்.

* அயோடைஸ்டு உப்பு.

* மருந்து உட்கொண்ட அரை மணி நேர இடைவெளிக்குப் பிறகே எந்த உணவையும் சாப்பிட வேண்டும்.

குறைந்த தைராய்டு உள்ளவர்கள் சாப்பிடவேண்டியவை

* மீன், நட்ஸ், பச்சைக் காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள், பால், பால் பொருள்கள், கல்பாசி.

குறைந்த தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை

* சோயா பால், முட்டைகோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர், பிரெட், சிப்ஸ், சிக்கன், வெண்ணெய், பொரித்த உணவுகள், துரித உணவுகள், காபி மற்றும் ஆல்கஹால்.

அதிக தைராய்டு உள்ளவர்கள் சாப்பிடவேண்டியவை

* மீன், ஆலிவ் ஆயில், நட்ஸ், ஆளிவிதை, இறைச்சி, முட்டை, காளான், பாதாம், பீன்ஸ், முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர்.

அதிக தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்கவேண்டியவை

* சோடியம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகள், பிரெட் மற்றும் காபி.